ஸநாதனத்தை பற்றி நான் பேசியது சரிதான்! பதவி பெரிதல்ல - மனிதனாக இருப்பது தான் முக்கியம் அமைச்சர் உதயநிதி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

ஸநாதனத்தை பற்றி நான் பேசியது சரிதான்! பதவி பெரிதல்ல - மனிதனாக இருப்பது தான் முக்கியம் அமைச்சர் உதயநிதி பேட்டி

சென்னை, நவ. 7- ஸநாதன தர் மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள் ளிட்ட இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உச்சகட்டமாக உத்தரப் பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி தலையை கொண்டு வரு பவர்களுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், தன்னுடைய பேச்சில் உறுதியாக இருப்பதாகவும் விளை வுகளை சந்திக்கத் தயார் எனவும் பதி லடி கொடுத்தார் உதயநிதி. அதே போல ஸநாதனம் பற்றி பேசிய உதய நிதி ஸ்டாலின் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி நிர் வாகிகள் சார்பில் கோ வாரண்டோ வழக்கும் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. ஆனால், தான் அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என வும், தனிப்பட்ட முறையிலேயே பேசியதாகவும் உதயநிதி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதனிடையே திராவிட ஒழிப்புக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸநாதன ஒழிப்பு தொடர்பான அமைச்சரின் பேச்சினுடைய விளை வுதான் இப்படியான மனுவை தாக் கல் செய்துள்ளனர் என்றும் ஸநாத னம் பற்றி பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி னார்.

இந்த நிலையில் நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து பெறுவதற்காக விசிக தலைவர் திருமாவளவனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதய நிதி, “ஸநாதனம் குறித்து நான் பேசியதில் தவறு எதுவும் கிடை யாது. எதையும் சட்டப்படி சந்திக் கத் தயாராகவே இருக்கிறேன். நான் சொன்ன வார்த்தையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

என்னுடைய கொள்கையைத் தான் நான் பேசியுள்ளேன். ஸநா தனம் பற்றி அண்ணல் அம்பேத் கர், தந்தை பெரியார், விசிக தலைவர் திருமாவளவன் பேசியதை விட நான் பெரிதாக எதுவும் பேசவில்லை. நான் பேசியது சரிதான்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சராக இருந்துகொண்டு இப்படி பேசலாமா என்று செய்தி யாளர் கேள்வி எழுப்பிக் கொண்டி ருக்கும்போதே இடைமறித்து, “அமைச்சர் பதவி இன்று வரும்.. நாளை போகும். சட்டமன்ற உறுப் பினர் பதவி, இளைஞரணிச் செய லாளர் பதவி கூட அப்படித்தான். பதவியில் இருப்பதை விட முதலில் மனிதனாக இருப்பது முக்கியம். எதையும் சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறினார்.

No comments:

Post a Comment