தாத்தாவும் - தம்பிகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

தாத்தாவும் - தம்பிகளும்

K.Annamalai நீ படிச்ச ஸ்கூல்ல Headmaster நானு .... நீயெல்லாம் இப்போ தான் பெரியாரோட சிலைகளை உடைக்கணும்னு பேசுற, அதுவும் அவரோட பேர கூட சொல்ல முடியாம .... அந்த பயம் இருக்கணும்....

நானெல்லாம் இவரோட சிலைகள உடைக்கணும்னு வெளிப்படையா பேசி பல வழக்குகளை வாங்கினது மட்டுமில்ல, இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்கு போய் பேசி இவரோட சிலைகளை உடைக்க ஆள் சேர்த்தவனாக்கும்.... அவ்ளோ வெறித்தனமா இருந்தவனாக்கும்....

பின்னாடி உங்க கூட்டத்தோட வன்மத்த தெரிஞ்சுக்கிட்டேன்.... மானமும், அறிவும், சுயமரியாதையும் மனிதனுக்கு அழகு, அதுவே அவசியம்னும் புரிஞ்சிக்கிட்டேன்.... தந்தை பெரியார் அய்யாவோட கருத்துக்களோட, செயல்பாட்டோட அவசியத்தையும், தேவையையும் புரிஞ்சிக்கிட்டேன் .... 

நீ இல்ல, உங்க கூட்டத்த சேர்ந்த எவனாலையும் எங்க தாத்தாவோட சிலைய புடுங்க இல்ல, புடுங்கணும்னு நினைக்க கூட முடியாது .... அவ்ளோ  Strong uh  ....

ஹிந்துத்துவா பாய்ஸ் நீங்கலாம் இன்னக்கி படிக்கிறதுக்கு, சுயமரியாதையோட, சம உரிமையோட ஒரு அளவுக்காவது வாழ முடியுதுன்னா அதுக்கு காரணம் இவரோட பங்களிப்பும், செயல்பாடுகளும் தான் .... 

எவன் பேச்சையும் கேட்கக் கூடாதுன்னு சொல்லி சிந்திக்க கத்துக் கொடுத்தவரு .... இதெல்லாம் புரிஞ்சா நீங்க ஏன் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு ( ஹிந்துத்துவா ) அடிமையா இருக்கப் போறீங்க .... திருந்துங்கடா டேய் ....      

- எஸ்.சத்தியபிரபு செல்வராஜ்

(சமூக ஊடகத்திலிருந்து...)

No comments:

Post a Comment