பிரபல நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

பிரபல நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

பிரபல நாகஸ்வர இசைப் பேரறிஞர் கலை மாமணி மதுரை 'சேது ராமன்' பொன்னுசாமி  (வயது 91) அவர்கள் மறைவுற்றார் (27.11.2023) என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவரது தந்தையைப் பெற்ற தாத்தா மேள கர்த்தாக்கள் 36ஆ 72ஆ என்ற ஆய்வில் "72 மேள கர்த்தாக்கள்" என தன் இசைத்திறத்தால் உறுதி செய்த பேரறிஞர். அத்தகைய பாரம் பரிய புகழ் பெற்றவர் எம்.பி.என். பொன்னுசாமி அவர்கள்.

'தில்லானா மோகனாம்பாள்' திரைப் படத்தில் அவரது வாசிப்பு என்றும் கேட்டு மகிழத்தக்கத் தகுதி பெற்று நிலைத்தது!

நாம் அவர்களை பெரியார் திடலில் அழைத்து கழகச் சார்பில் பாராட்டிப் பெருமைப்படுத்தினோம்.

அவரது மறைவால் இசை உலகமும், கலை உலகமும் பெரும் இழப்புக்குள்ளாகி உள்ளது.

அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினர், இசை உலகினர் அனை வருக்கும் நமது ஆறுதலையும், மறைந்த கலைப் புலமை யாளருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் உரித்தாக்குகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2023

No comments:

Post a Comment