பி.கார்த்திகேயன் - நா.கண்மணி இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

பி.கார்த்திகேயன் - நா.கண்மணி இணையேற்பு விழா

சி.க.பிரிதிவிராஜ் (‘விடுதலை’ விளம்பரப் பிரிவு) - கற்பகம் இணையரின் மகன் பி.கார்த்திகேயன், குத்தாலம் ஒன்றிய கழகத் தலைவர் சா.முருகையன் - பார்வதி இணையரின் பெயர்த்தியும் - நா.நாராயணமூர்த்தி - உஷா இணையரின் மகளுமான நா.கண்மணி வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். விழாவிற்குத் தலைமை வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா.பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவொற்றியூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஓவியர் பெரு.இளங்கோ, மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், துணைத் தலைவர் ந.இராசேந்திரன், எண்ணூர் கழகத் தலைவர் மு.மணி காளியப்பன், செயலாளர் பொ.இராமச்சந்திரன், இ.இந்திரா மற்றும் கழகத் தோழர்கள் மண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். முதல் நாளில் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி - தி.மு.க. உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினார். (19.11.2023, எண்ணூர்).


No comments:

Post a Comment