விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், விக்கிர வாண்டியில் தந்தை பெரியார் சிலை அமை வதற்கு முழுக் காரண மாகப் பணிபுரிந்தவருமான விக்கிரவாண்டி - மறைந்த பெரியார் பெருந் தொண்டர், நல்லாசிரியர்
த. தண்டபாணியின் இணையர் த. சரோஜா அம்மையார் வயது 89, (ஆசிரியர் - ஓய்வு) இன்று (20.11.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
குடும்பமே கழகக் கொள்கையை வாழ்வியலாகக் கொண்டது. அம்மையாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பாகும்.
சில மாதங்களுக்கு முன்பு திண்டிவனம் கழகத் தோழர்களுடன் அம்மையார் இல்லத்திற்குச் சென்று அவரின் உடல் நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடித் திரும்பினோம்.
அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
20.11.2023

No comments:
Post a Comment