ஆர்.எஸ்.எஸ். அரசியலும் ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும் - வ.மணிமாறன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

ஆர்.எஸ்.எஸ். அரசியலும் ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும் - வ.மணிமாறன்

ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் பேசியிருக்கும் சர்ச்சை கருத்துகள் ஏராளம். அவை அனைத்தும் அரசமைப்புச் சட்டப்பணிகள் தொடர்பானவை அல்ல. அந்தப் பேச்சுகளுக்கும், ஆளுநர் ஆற்ற வேண்டிய பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ். அரசியலை, ஆர்.எஸ்.எஸ். புகுத்த நினைக்கும் பாசிச சித்தாந்தங்களையே அவர் பேசி வருகிறார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் 25.10.2023 அன்று கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு (பெட் ரோல் நிரப்பிய பாட்டில்) வீசினார். இது ஆளுநர் மாளிகையின் முன்புறத்தில் உள்ள சாலையில் விழுந்து வெடித்தது. ஆளுநர் மாளிகையின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர். இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நபரை நீதித்துறை நடுவர் முன்பு நேர் நிறுத்தி புழல் சிறையில் அடைத் தனர்.

இந்த விவகாரம் பெரும் அர சியல் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் (25.10.2023) தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு களை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவ லர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டு களை ராஜ்பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று மிகவும் மிகைப் படுத்திக் கூறியது.

அடுத்த நாள், மற்றொரு அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ஆளுநர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும்; அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படுவ தில்லை என்றும் குற்றம்சாட்டியது. 

அடுத்து டுவிட்டரில் மீண்டும் பதிவிட்ட ஆளுநர் மாளிகை, “அவசர கதியில் கைது மேற் கொள்ளப்பட்டு, மாஜிஸ்ட்ரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரி வான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாய மான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப் படுகிறது” என்று சாடியது.

இதனையடுத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட விரிவான விளக்க அறிக்கையும், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியும் ஆளுநர் மாளிகை அடுத்தடுத்து வெளியிட்ட அறிக்கைகளில் உள்ள அபத்தங்களையும், பொய்களையும் அம்பலப்படுத்தின. 

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆளுநர் மாளிகை சார்பாக ஆளுநரின் துணைச்செயலாளர் டி.செங்கோட்டையன் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில், “கடந்த பல மாதங்களாக ஆளுநர் மீது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து வாய்மொழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பெரும் பாலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களுடைய சமூக ஊடகங் களிலும் முன்வைக்கப்படுகின்றன. இந்த அச் சுறுத்தல்கள் ஆளுநரின் அரசமைப்புச் சட்டப் பணிகளை செய்யவிடாமல் அவரை கட்டுப் படுத்தும் நோக்கத்தில் இருக்கின்றன” என்று தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள், அரசியல் விமர்சகர்கள், செயல்பாட் டாளர்கள் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியிருக்கிறது.

 நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, ஸநாதனம், கால்டுவெல், திராவிடம், மார்க்சியம், டார்வினியம், பெரியாரியம், வள்ளலார், போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை நிலுவையில் போட்டிருப்பது, ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம்.. இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் சர்ச்சைப் பேச்சுகள் ஏராளம்.

இவற்றை மறுத்தும் விமர்சித்தும் பேசக்கூடிய கருத்துக்கள்; எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத் தும், 

ஆளுநர் மீதான “வாய்மொழித் தாக்குதல்கள் என்றோ உயிருக்கு விடுக்கும் அச்சுறுத்தல் என்றோ” கூற முடியுமா? 

ஜனநாயகத்தின் உயரிய பண்புக் கூறுகளையே “அரசமைப்புச் சட்டப் பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டவை” என்று ஆளுநர் கூறுவது சரியானதா? 

ஆளுநர் பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு யாரும் மாற்றுக் கருத்துக்களை சொல்லக் கூடாது என்று எதிர்பார்ப்பது சரியா? 

“நான் மாநிலத்தின் ஆளுநராக இருக்கிறேன். என்னை யாரும் “எதிர்க்கக் கூடாது” என்கிற மனநிலையில் அவர் இருக்கலாமா?

பிரிட்டனுக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்த நாட்டை ஆண்ட கவர்னர்களும், கவர்னர் ஜெனரல்களும் அதிகாரம் செலுத்தியது போன்று; அடக்குமுறைகளை ஏவி விட்டது போன்று இன்றைய ஆளுநர்களும் அதிகாரம் செலுத்தவும் அடக்குமுறைகளை ஏவி விடவும் அதிகாரம் இருப்பதாக ஆர்.என்.ரவி நினைக்கிறாரா?

அப்படி அவர் நினைத்தால்.. அது சாத்திய மில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இருப்பது மன்னராட்சி கால; மனுதர்ம கால இந்தியா அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடக்கும் இந்தியா. இங்கு கருத்துரிமையும் பேச்சுரிமையும் அனைவருக்கும் இருக்கின்றன. 

அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை, அரசியலை பரப்ப நினைத்தால்; செல்லும் இடமெல்லாம் அதனைப் பேசிக் கொண்டிருந்தால்.. அதற்கு உரிய பதிலும் விமர்சனமும் எழுவது தவிர்க்க முடியாதது. அவற்றை ஆளுநர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். 

இப்படி அவர் பேசிய முத்துக்களில் சில வருமாறு: 

“நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வினிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.”

“காரல் மார்க்ஸின் கோட்பாடு என்பது, இருப்ப வர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்களைக்கொண்டது. அந்தக் கோட்பாட்டின்படி, ‘இல்லாதவர்கள்’ மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாகப் பரவு கிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவு களுக்கிடையேயும், அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது.”

“புதிய கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றைப் புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்“

“ஸநாதன தர்மம்தான் நம் பாரதத்தை உருவாக்கியது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசமைப்புச் சட்டம், ஸநாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். ஸநாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது”

“முனிவர்களாலும் ஸநாதன தர்மத்தின் ஒளியாலும் இந்த நாடு உருவானது”

“கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிரா கரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிறுத்திவைக்கப் படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்துக்காகவே நாகரிகமாக நிறுத்திவைப்பு என்கிறோம். நிறுத்திவைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத்தான் பொருள்”

“நீட் வருவதற்கு முன்பிருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை அதிகரித்திருக்கிறது. நீட் விலக்கு மசோதா கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது”

“சில பிராந்தியங்கள் மட்டும் முன்னேறுவது சரியல்ல. அது ‘டார்வினியன் மாடல்!’ சில புத்திக் கூர்மையுள்ளவர்கள் எல்லாப் பலன்களையும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை விட்டு விடு கிறார்கள்”

இவை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள். முரண் பாடாகவும் சர்ச்சையை தூண் டக்கூடியதாகவும் இந்தப் பேச் சுக்கள் உள்ளன. இவை அறி வியலுக்கும், சமூக வளர்ச்சிக்கும் மட்டுமல்ல, மக்களின் நலன் களுக்கும் எதிரானவை. இந்தப் பேச்சுகளுக்கு எதிர்ப்பு வராமல் எப்படி இருக்கும்?

ஆங்கிலேயர் காலத்திய ஆளுநர் என்ற பதவி - இன்றைக் குத் தேவை இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளே போதுமானது என்ற ஜனநாயக சிந்தனையை உரத்து முழங்கிய மாநிலம் தமிழ்நாடு. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் அவசியமில்லை என போர்க்கொடி தூக்கிய மாநிலம்.

இந்த மாநிலத்துக்கு வந்திருக்கும் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநருக்கு உரிய பணிகளை செய்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ். அரசியலை, சித்தாந்தத்தை பரப்ப நினைத்தால், அதற்கு உரிய எதிர்வினைகள் எப்படி வராமல் இருக்கும்?  

மன்னராட்சிக் காலத்திலும் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் அடிமைகளாக, குடி படைகளாகத் தான் மக்கள் நடத்தப்பட்டனர். இந்த குடிபடைகள் (ஷிuதீழீமீநீt) என்பது அரசுக்கு கட்டுப் பட்டு, அரசு கூறுவதை செயல்படுத்துபவர்கள். அரசை இவர்களால் கட்டுப்படுத்த இயலாது. அரசு சொல்வது தான் வேத வாக்கு.  அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகம். மன்னராட்சி காலத்திலும் வெள்ளையர் ஆட்சி காலத்திலும் இந்திய மக்கள் இப்படித்தான் வாழ்ந்தனர். அன்றைய ஆளுநர்களும் மக்களை குடிபடைகளாக, அடிமைகளாகத் தான் நடத்தினர்.

இந்தியா விடுதலை பெற்று குடியரசான போது, மக்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்களாக, குடிமக்களாக (சிவீtவீக்ஷ்மீஸீ) ஆயினர். இந்த குடிமக்கள் என்பது அடிப்படை உரிமைகளுடன்; பொறுப்புகளுடன் செயல்பட்டு அரசாங்கத்தை தங்களுக்குப் பணி செய்ய வைப்பதாகும். 

இந்த ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவருடைய எஜமானர்களான ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டு மக்களை குடிபடைகளாக (ஷிuதீழீமீநீt) கருது கின்றன. குடிபடைகளாக மாற்றத் துடிக்கின்றன. 

“நாமார்க்கும் குடியல்லோம்” என மன்னராட்சி காலத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பிய வரலாறு கொண்டது தமிழ்நாடு. இதனை ஆளுநர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும்; தேர்தல்களில் வெற்றி காண வேண்டும் என்பது ஆர்.என்.ரவி அவர்களின் அக்கறை யாகவும் விருப்பமாகவும் இருக்கலாம். அதற்காக அவர் பேசலாம், செயல்படலாம். அதற்கு ஆளுநர் பதவி பொருத்தமற்றது. அதனை கிண்டி ராஜ்பவனில் இருந்து கொண்டு செய்ய முடியாது.

No comments:

Post a Comment