கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

👉தேர்தல் பத்திர சட்டம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் கட்சிகளுக்கு அளிக் கப்பட்ட நிதி, அது யார் மூலம் வழங்கப்பட்டது உட்பட அனைத்து விவரங்களும் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட தரவின் தகவல்களை அறிக்கையாக இரண்டு வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

👉நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணையின் போது பாதியில் வெளியேறினார் மஹுவா மொய்த்ரா: கண்ணியமற்ற கேள்வி கேட்டதாக புகார்

👉 தமிழ்நாட்டை தொடர்ந்து கேரள ஆளுநர் மீதும் வழக்கு: 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததால் கேரள அரசு நடவடிக்கை.

தி டெலிகிராப்

👉 இந்தியாவில் வேலையின்மை விகிதம் அக்டோபரில் 10 சதவீதத்தை தாண்டியது, கோவிட்-க்கு பிந்தைய மெது வான மீட்சியே காரணம் என சி.எம்.அய்.இ.  கணக்கெடுப்பு

டைம்ஸ் ஆப் இந்தியா

👉 இந்தியா கூட்டணி மெதுவாக செல்கிறது என்ற நிதிஷ் குமாரின் கருத்து புரிந்து கொள்ளக்கூடியது, ஆனால் மாநில தேர்தல்கள் முக்கியம் என காங்கிரஸ் கருத்து.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment