காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு

சென்னை,நவ.8- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 மருத்துவம், 137 பல் மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இணையவழியே நேற்று (7.11.2023) தொடங்கியது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படு கிறது.

2023-2024-ஆம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு 4 சுற்றுகள் நிறைவடைந்தன.

அகில இந்திய ஒதுக்கீடு கலந் தாய்வு முடிவில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழ கங்களில் 68 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 14 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 4 இடங்கள் என மொத்தம் 18 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன.

மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி யுடன் முடிந்துவிட்டதால், இந்த இடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவுக்கு தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் கடிதம் மூலம் வலி யுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து காலியாக வுள்ள 86 எம்பிபிஎஸ் இடங் களுக்கும் கலந்தாய்வு நடத்த ஒன்றிய சுகாதாரத் துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா அனுமதி அளித்தார்.

அதன்படி, அகில இந்திய ஒதுக் கீட்டில் தமிழ்நாட்டில் காலியாக வுள்ள 68 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கிய கலந்தாய்வு 6.11.2023 அன்று நிறைவடைந்தது. தமிழ் நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக் கான 14 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 4 இடங்கள் என மொத்தம் 18 எம்பிபிஎஸ் இடங் களுக்கான கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளத்தில் நேற்று 7.11.2023 அன்று தொடங்கி நவ.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனுடன் சேர்த்து சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக வுள்ள 1 இடம், 11 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியா கவுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 87 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 49 இடங்கள் என மொத்தம் 137 பிடிஎஸ் இடங் களுக்கும் கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment