வடக்குத்து அண்ணா கிராமத்தில் ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர்களுக்கு வீரவணக்க நாள் சிறப்புக் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

வடக்குத்து அண்ணா கிராமத்தில் ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர்களுக்கு வீரவணக்க நாள் சிறப்புக் கூட்டம்!

வடக்குத்து, நவ. 28-  கடலூர் மாவட்ட திராவிடர் கழ கம் சார்பில் ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர்கள் வீர வணக்க நாள் சிறப்புக் கூட்டம் 26.11.2023 ஞாயிறு மாலை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப் பக வளாகத்தில் மாவட்ட தலைவர் சொ. தண்ட பாணி தலைமையில், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முனியம்மாள், தமிழ் ஏந்தி ஆகியோர் முன்னிலை யில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் டிஜிட்டல் ராமநா தன் வரவேற்புரை ஆற்றி னார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் 1957 நவம்பர் 26 அன்று பெரியாரின் ஆணைக்கு இணங்க நாடு எங்கும் நடைபெற்ற ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தின் பிரி வுகள் எரிப்பு போராட் டம்-பத்தாயிரம் பேர்கள் பங்கேற்ற போராட்டம் -3500 பேர் கைது செய் யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதிகபட்ச தண்டனை மூன்றாண்டு கடுங்காவல் சிறையில் 5 பேரும் விடு தலையான பிறகு சிறைக் கொடுமை காரணமாக இறந்தவர்கள் 13 பேரும் ஆக 18 பேர் அந்த போராட் டத்தால் உயிர் துறந்தனர். .வீரம் செறிந்த, ஈகம் நிறைந்த போராட்டம் இது. இந்த போராட் டத்தை நினைவு கூரக்கூடிய வகையில் இன்றைக்கு நாம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று குறிப்பிட்டு சிறப்புரை யாற்றினார்.

மற்றும் மாநில பகுத் தறிவாளர் கழக அமைப் பாளர் பெரியார் செல் வம், மாநில இளைஞர் அணி துணைச் செயலா ளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், ஒன்றிய கழ கத் தலைவர் தமிழன்பன், கவிஞர் தீபக், பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்க வேல், வடலூர் கழக செயலாளர் குணசேகரன், கழக அமைப்பாளர் முரு கன், வடக்குத்து கிளைக் கழக தலைவர் பாஸ்கர், செயலாளர் கண்ணன், மகளிர் அணி கலைச் செல்வி, சுமலதா, திரா விட மணி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில் நூலகர் கண் ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment