அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வு அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, நவ. 15- விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத் துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணைய வழியில் நுழைவு அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோ வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நிய மனம் மூலமாக தேர்ந் தெடுக்கப்பட இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் பத விக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக் கும், வேலைவாய்ப்பு அலு வலகம் மூலமாக பரிந் துரைக்கப்பட்டு விண்ணப் பம் சமர்ப்பித்தவர்களுக் கும் நவ.19ஆம் தேதி எழுத் துத் தேர்வு நடைபெறவுள் ளது. இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கான நுழைவு அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அவ்வாறு பதிவிறக் கம் செய்ய முடியாதவர்கள் 04447749002 என்ற தொழில்நுட்ப உதவி மய்ய எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந் துரைக்கப்பட்டு விண் ணப்பித்தவர்களில் தகுதி யுள்ளவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக தேர்வுக் கான நுழைவு அனுமதி சீட்டு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment