எனக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

எனக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

திருச்சி, நவ. 8 - தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:-

எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக் கிழமை அன்று நான் ஊரில் இல்லை, அன்றைய தினம் என்னு டைய பிறந்த நாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள் ளங்களும் நண்பர்களும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கோ நேரில் வந்து எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வரவேண்டாம் என்பதைதெரிவித்துக் கொள்கி றேன்.

மேலும் அன்றைய தினம் என்னுடைய பிறந்த நாள் விழா என்ற பெயரில் எவ்வித நிகழ்ச்சிகளையும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்பதை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என்.நேரு தமது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment