“சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

“சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு

திருவாரூர், நவ.6- திருவாரூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு “சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் கருத்தரங்கம் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை யில் நடைபெற்றது. 

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திட 12 குழுக்கள்

மேனாள் முதலமைச்சர் முத் தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா கொண்டாட்டங் கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின் றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவ தற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. 

அக்குழுக்களில் ஒன்றான சட்டமன்ற நாயகர் - கலைஞர் என்ற குழு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை யில் மேனாள் பேரவைத் தலை வர், மேனாள் சட்டமன்ற உறுப் பினர்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அலுவலர் களை உள்ளடக்கியதாக அமைக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் (ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளி கள் மற்றும் 3 கல்லூரிகள் என்ற வகையில்) நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத் தின் மூலம் சமூக முன்னேற்றத் திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித் துள்ளது. அந்த அடிப்படையில் இதற்கென நான்கு துணைக் குழுக்களும் பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட் டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக திரு வாரூரில் நடைபெற்ற கருத்தரங் கில் சட்டமன்ற பேரவைத் தலை வர் மு.அப்பாவு தெரிவித்த தாவது,

மேனாள் முதலமைச்சர் முத் தமிழறிஞர் கலைஞர் வாழ்க்கை யானது மக்களுக்காக அர்ப் பணிக்கப்பட்டு மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்க ளையே தீட்டி செயல்படுத்தியுள்ளார் கள்.

“சட்டமன்ற நாயகர் கலை ஞர்” கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பற்றி பேசி யது வியந்து பாராட்டக்கூடிய தாக அமைந்தது. தற்பொழுது எனக்கு வருத்தம் - பெரும்பாலான பெண்கள் கல்வி பயில்வதை காண பெரியாரோ, அறிஞர் அண்ணாவோ இல்லை என்பதே. 

பெண் கல்வி

அன்றைய காலகட்டத்தில் பெண் கல்வி என்பது எளிதாக கிடைத்ததன்று. பல்வேறு போராட் டங்களுக்கு பிறகே கிடைத்தது. மேனாள் முதலமைச்சர் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள் ஆணுக்கு, பெண் நிகர் என பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என கொண்டுவந்தார்கள்.

தற்பொழுது பெண்கல்வியினை ஊக்கு விக்கும் விதமாக முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் பெண் களுக்கு புதுமைபெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள்.

பெங்களூரில் மட்டுமே தக வல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் இருந்த நிலையில் தமிழ்நாட்டில் அதேபோன்று சென்னையில்தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை யும், சிறுசேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவினையும் மேனாள் முதலமைச்சர் கலை ஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்தார்கள். அதுமட்டுமின்றி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே மென்பொருள்கள் இருந்த நிலையினை மாற்றி தமிழ் மொழியில் மென்பொரு ளினை வடிவமைத்து வெளியிட குழு அமைத்து தமிழில் மென் பொருள் வெளியிட்ட பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களையே சார்ந்தது. தகவல் தொழில்நுட்பத்தில் பெருமள வில் தமிழர்கள் அதிகளவில் பணியாற்றுவதற்கும். 

தமிழ்நாட்டில் மென் பொருள் வளர்ச்சிக்கும் காரணமும் அவரே. முதலமைச்சர் அவர்கள் தற்பொ ழுது இந்த தொழில்நுட்ப படிப் பினை பல ஆயிரம் மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார் கள். இந்த அரசு சாமானியர் களின் அரசு.

இலவச பேருந்து வசதி

அதுமட்டுமின்றி பெண் களின் நிலையறிந்து அன் றாட பணிகளையும் நினைத்து தமிழ் நாடு முதலமைச்சர் அவர் கள் நகர பேருந்துகளில் கட்டண மில்லா இலவச பேருந்து வசதி யினை அறிமுகப்படுத்தியதால் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர்.

மேலும், வசதியில்லாமல்; ஆதரவற்ற முதியோர்களுக்கும், வீட்டை விட்டு வெளிவரமுடி யாத நோயாளிகளை கண்ட றிந்து அவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட் டத்தினையும் வழங்கியுள்ளர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் தற்பொழுது 47 லட்சம் குடும்பங்கள் பயன டைந்து வருகின்றனர். 

மேலும், தாய்மார்களின் பொருளாதார நிலைமை யினை அறிந்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களை வெளிப் படைத் தன்மையாக தேர்ந் தெடுத்து கலைஞர் மகளிர் உரி மைத் திட்டத்தின் கீழ் அவர் களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். 

பள்ளி கல்வியுடன் மதிய உண வுத் திட்டத்தினையும் வழங்கியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர் கள். இன்றைய தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை அறி முகப்படுத்தியதால் 37,000 அரசு ஆரம்ப பள்ளிகளில் 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன டைந்து வருகின்றனர்.

ஏழை எளிய மக்களின் துயர் நிலையினை புரிந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற் கொள்வதற்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தினை அறி முகப்படுத்தினார். 

பற்பல திட்டங்கள்

இதுபோன்ற பற்பல திட்டங் களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியவர் மேனாள் முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் மு.கருணாநிதி என தமிழ் நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் தார்.

அதனைத் தொடர்ந்து, மேனாள் முதலமைச்சர் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள் பயின்ற பள்ளியில், பயின்ற வகுப்பறையினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, அரசு தலைமை கொறடா முனை வர். கோ.வி.செழியன் அவர்கள் பார்வையிட்டு மாணவ, மாண வியர்களிடம் கலந்துரையாடி னார். 

இந்நிகழ்வில் அரசு தலைமை கொறடா முனைவர் கோ.வி.செழி யன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருசிறீ, மாவட்ட ஊராட் சித் தலைவர் தஜி.பாலு ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.

No comments:

Post a Comment