பாலஸ்தீனத்திற்கு இந்தியா அனுப்பிய உதவிப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

பாலஸ்தீனத்திற்கு இந்தியா அனுப்பிய உதவிப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு

காஸா, நவ.20 இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்கள் ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது தொடர்ந்து சிறு சிறு தாக்குதலை நடத்திவந்த இஸ்ரேல்  நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, முதல் பாலஸ் தீனத்தின் காசா பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி   வருகிறது. 

காசா மீது தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரு கிறது. ஹமாஸ்-_இஸ்ரேல் இடையே யான போரால் காசாவில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ் தீனர்கள் பலியாகினர். ஆயிரக்கணக் கானோர் காயம்டைந்துள்ளனர் காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் அல்லல்படும் சூழல் உள்ளது. 

ஆனால், இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசா முற்றிலும் நிலைகுலைந்து இருக்கிறது. 

இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக இந்திய அரசு மனி தாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. முன்னதாக மருந்துகள், குடில்கள், நீர் சுத்திகரிப்பு மாத் திரைகள், தார்ப்பாய்கள் உள்பட மொத்தம் 38 டன் எடை கொண்ட உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்தியா அனுப்பியிருந்தது. 

இதைத் தொடர்ந்து இந்தியா அனுப்பிய 32 டன் எடை கொண்ட 2-ஆவது தொகுதி உதவிப் பொருட் கள் தற்போது எகிப்து சென்ற டைந்துள்ளன. 

இதுகுறித்து இந்திய வெளியுற வுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள பதிவில், "பாலஸ்தீன மக்களுக்காக இந்தியா அனுப்பிய மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்து சென்று சேர்ந்துள்ளன. அங்குள்ள ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் இந்த உதவிப் பொருட்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன" என்று பதிவிட் டுள்ளார்.


No comments:

Post a Comment