தீபாவளியும் 'தமிழ் இந்து' தரும் பட்டியலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

தீபாவளியும் 'தமிழ் இந்து' தரும் பட்டியலும்

கலி. பூங்குன்றன்

"இன்று பெரும்பாலானோருக்கு வெடிச் சத்தத்துடன் தான் விடிந்திருக்கும். பனி யில்லாத மார்கழிக்குப் பழகிய வர்கள்கூட வெடியில்லாத தீபாவளியை ஏற்றுக்கொள்வ தில்லை. விளைவு? மூச்சுத் திணறவைக்கும் புகை மண்ட லம்தான். தீபாவளியன்று தீக்காயங்களுக்கு அடுத்த படியாக மூச்சுத் திணறலால்தான் பலர் அவதிப்படுவர்.

இந்தியாவில் புற்றுநோயாளிகளைத் தொடர்ந்து மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள்தான் அதிகம். அப்படியிருக்கையில் பட்டாசுப் புகையால் உண்டாகும் மாசு, காற்றில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும். அது சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிப் பதால் காது கேட்பதில் பிரச்சினைகள் ஏற் படக் கூடும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் ரகுநாதன்.

* ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பட்டாசு வெடிக்கும் இடங்களுக்குச் செல் வதைத் தவிர்க்க வேண்டும்.

* இன்ஹேலர், மாத்திரைகள் போன்ற வற்றை வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.

* பட்டாசு வெடித்த கையால் கண்களைத் தொடக் கூடாது. பட்டாசின் மருந்து கைகளில் ஒட்டியிருந்தால் அது பார்வை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

* பட்டாசு வெடித்துவிட்டு கை, கால், முகத்தை நன்றாக சோப்புப் போட்டு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்.

* வெடிக்காத பட்டாசுகளில் உள்ள மருந் துகளை எடுத்துப் பயன்படுத்துவது தவறு.

* பட்டாசு வெடிக்கும்போது அருகில் வாளி நிறைய தண்ணீரை வைத்திருக்க வேண்டும்.

* பருத்தி ஆடையையும், செருப்பையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* பட்டாசுகளை வாகனங்களுக்கு அரு கிலோ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் களுக்கு அருகிலோ வைத்து வெடிக்கக் கூடாது. திறந்த வெளியில் வெடிப்பதே நல்லது.

* புகை வெளியேற வழியுள்ள இடத்தில் அமர்ந்து பலகாரங்களைச் செய்ய வேண்டும்.

* சமையலறையில் நீண்ட நேரம் நிற்க வேண்டியி ருந்தால் அதிக அளவு திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பண்டி கைக்குப் பிறகு உடலில் சர்க்கரையின் அளவைச் சோதித்துக் கொள்வது நல்லது.

* தீபாவளியன்று வெடி, மத்தாப்புப் புகையில் ஆட்டம் போடும் குழந்தைகள் அதற்கு அடுத்த நாள் உடல்நிலை பாதிக்கப் பட்டுப் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போக லாம். வெடிச் சத்தத்தால் குழந்தைகள், முதிய வர்கள் ஓய்வெடுக்க முடியாமல் சிரமப்படு வார்கள். அதிக ஒலி எழுப்பும் வெடிகளைக் குடியிருப்புகள் அதிகமில்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். தீப்புண் ஏற்பட்டால் எரிச்சல் அடங்கும் வரை தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும்."

- இவ்வளவுத் தகவல்களையும் பட்டியலிட்டு காட்டியிருப்பது 'இந்து தமிழ் திசை' ஞாயிறு தோறும் வெளியிடும் 'பெண்' தனி இணைப்பு ஆகும். (2019 அக்டோபர் 28)

தீபாவளி என்னும் விழாவே அறிவுக்குப் பொருத்தமற்ற ஒன்றாகும். பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் போய் விழுந்தான் என்பதும், கடலில் விழுந்த பூமியை பன்றி (வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு மீட்டான் என்பதெல்லாம் விஞ்ஞானம் விண்ணை முட்டிய 2023இல் தான் நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியைப் பிடரியில் அடித்து எழுப்பும்.

அதையும் கடந்து இந்த விழா கொண் டாடப் படுவதால் - இன்று உலகம் முழுவதும் பெருங் கூச்சலாக, அபாய அறிவிப்பாக இருக்கும் 'சுற்றுச்சூழல் பாதிப்பு' என்ற கண்ணோட்டத்தில் இந்தத் தீபாவளி கொண்டாடப்படும் முறை, வெடிகள், மத்தாப்புகள் எந்த அளவு சுற்றுச் சூழலுக்கு ஆபத்து, உயிர்களுக்கு அச்சுறுத்தல் என்பதை 'தமிழ் இந்து' வின் 'பெண்' தெளிவாகவே தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 'மன் கி பாத்' (மனிதனின் குரல்) உரை நிகழ்த்தும் பிரதமர் சுற்றுச் சூழலைப் பற்றி யெல்லாம் தொண்டையை கிழித்துக் கொண்டு முழங்குகிறாரே  - அதற்கு நேர் எதிராக பிரதமர்  தீபாவளியை வெடி வெடித்துக் கொண்டாடுவ தாகப் படங்களுடன் செய்தி வெளியாகிறதே - இது என்ன இரட்டை வேடம்? காசைக் கரியாக்காதே என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன் னொரு பக்கம் தீபாவளி என்றாலே பட்டாசு வெடி என்று ஆகி விட்டதே, இதற்கு என்றுதான் முடிவு? தேவை பகுத்தறிவு என்பதுதான் தீர்வு! 

No comments:

Post a Comment