நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை பினராயி விஜயன் சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை பினராயி விஜயன் சாடல்

திருவனந்தபுரம், நவ. 10- நாட்டில் வங்கிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களை பிடிக்க எந்த சட்ட அமலாக்கத் துறையும் புறப்படவில்லை என்று முதலமைச்சர் பின ராயி விஜயன் கூறினார். 

மாநில கூட்டுறவு ஒன் றியம் நடத்திய கூட்டுறவு பாதுகாப்பு மகா சங்க மத்தை 6.11.2023 அன்று துவக்கி வைத்து முதல மைச்சர் பினராயி விஜயன் பேசினார்.  

அப்போது அவர், வேறு நாடுகளுக்குத் தப் பிச் சென்றவர்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களில் 15 சதவிகிதம் பேர் சங் பரிவாருக்கு நிதியளிக்கும் தொழிலதிபர்கள். ஒரு  கேள்வி கூட அவர்களுக்கு எதிராக எழுவதில்லை. அமலாக்க இயக்குநரகம் கேரளாவிற்கு வந்ததின் தீங்கிழைக்கும் நோக்கம் அனைவருக்கும் தெரியும். அமலாக்க இயக்குநரகம் என்பது ஒரு புலனாய்வு நிறுவனமாகும், 

இது  நாட்டின் உச்ச நீதிமன்றத்திடம் இருந் தும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. கேரளா வுக்கு வந்த பிறகும் அவர் கள் சிறப்பாக எதையும் காணவில்லை. ஆனால், ஒட்டுமொத்த கூட்டுற வுத் துறையிலும் நடக்கக் கூடாதவற்றைப் பரப்பு வதே நோக்கமாக இருந் தது. மாநில கூட்டுறவுத் துறையை முடக்கும் நடவடிக்கைகள் எதையும் ஏற்க முடியாது. 

கேரளத்தில் உள்ள கூட்டுறவு துறை நாட் டிற்கு முன்மாதிரியாக உள்ளது. உலக மயமாக்க லுக்குப் பிந்தைய ஆணை யங்கள் கூட்டுறவுத் துறைக்கு பேரழிவு தரும் திட்டங்களை முன்வைத் துள்ளன.  இந்த திட்டங் களை, இடதுசாரிகளும் காங்கிரசும் இணைந்து எதிர்த்தன. 

எனவே கூட்டுறவுத் துறையைப் பாதுகாக்க தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் பேசுகையில், கூட்டுறவுத் துறை  என் பது மேசையில் இருக்கும் கண்ணாடிக் கிண்ணம். அதனை என்றும்  யாரு டைய கையாலும் உடைக்க இட மளிக்கக் கூடாது என்றும், கூட்டுறவுத் துறையைக் காக்க ஒன் றாக நிற்போம் என்றும் கூறினார். கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.என்.வாசவன் தலைமை வகித் தார்.

No comments:

Post a Comment