ஜொகூர் தம்போய் கிளைச் செயலாளர் 'பெரியார் தொண்டர்' அப்துல் குத்தூஸ் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

ஜொகூர் தம்போய் கிளைச் செயலாளர் 'பெரியார் தொண்டர்' அப்துல் குத்தூஸ் மறைவு

மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் மத்தியச் செயலவை உறுப்பினரும் ஜொகூர், தம்போய் கிளைச் செயலாளருமான 'பெரியார் தொண்டர்' அப்துல் குத்தூஸ் அவர்கள் (வயது 78) 25-11-2023 அன்று மதியம்(தமிழ்நாடு நேரப்படி) 2.45 மணிக்கு தமிழ்நாட்டில் அவரது இல்லத்தில் மறைவுற்றார். 
மதிக தம்போய் கிளை அமைக்கப்பட்டு 50 ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இக்கிளை அமைப்பிலிருந்து இன்று வரையில் கிளைச் செயலாளராக 50 ஆண்டுகள் தொடர் பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்துல் குத்தூஸ் மறைவு அவரது குடும்பத்தினருக்கும், நமது கழகத்திற்கும் பெரும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த அய்யாவின் குடும்பத்தினருக்கு  கழகச் சார்பாக ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment