தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர், உறுப்பினர்களை நியமிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர், உறுப்பினர்களை நியமிக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, நவ. 10-  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் கள் எப்போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க நவம்பர் 8ஆ-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான கே.பாலு தாக்கல் செய்த மனுவில், "தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யத்தின் தலைவர், துணைத் தலை வர் மற்றும் உறுப்பினர்கள் பதவி கள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து காலியாக உள்ளன.

இதன் காரணமாக பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக் களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. எனவே, ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விட வேண்டும்" என கோரியிருந் தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது ஒன் றிய அரசுத் தரப்பில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யத்துக்கு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக் கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் அய்ந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்துக்கு அனு மதிக்கப்பட்ட உறுப்பினர்கள் எப் போது நியமிக்கப்படுவர் என கேள்வி எழுப்பி, இதுகுறித்து ஒன் றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8ஆ-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment