மின்சாரம் திருட்டு: கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி மீது வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

மின்சாரம் திருட்டு: கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி மீது வழக்கு

பெங்களூரு, நவ. 15- தீபாவளியையொட்டி தனது இல்லத்திற்கு மின் அலங்காரம் செய்ய மின் திருட்டில் ஈடுபட்டதாக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருநாடகா மேனாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி வீடு பெங் களூருவில் உள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி வீடு மின் அலங்காரத்தால் ஜொலிக்கப்பட்டு இருந்தது. வீட்டின் அருகில் டிரான்ஸ்பார்ம் இருந்தது.இதிலிருந்து மின்சாரத்தை திருடியாக காங். பிரமுகர் காட்சிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றினார்.

இதையடுத்து காவல்துறையில் பெங்களூரு மின் விநியோக நிறுவனம் காவல்துறையில் புகார் கூறியது.காவல்துறையினர் குமாரசாமி மீது எப்.அய்.ஆர். எனப் படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். தனக்கு தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும் மன்னிப்பு கோருவ தாக குமாரசாமி தெரிவித்தார்.



No comments:

Post a Comment