சாமியார்கள்! ஜாக்கிரதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

சாமியார்கள்! ஜாக்கிரதை

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைது

சேலம், நவ. 23 - குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. அவரை கைது செய்த காவல்துறை, அவரது கூட்டாளியை யும் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகு தியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பசவராஜ் மற்றும் செல்வி இணையருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்க ளுக்கு குழந்தைகள் இல்லை.

குழந்தை பேறுக்காக கடந்த ஓர் ஆண்டாக செல்வி பல்வேறு இடங் களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த 15ஆம் தேதி காலை செல்வி திடீரென காணாமல் போனார். மனைவியை காணவில்லை என தாரமங்கலம் காவல் துறையில் பசவராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் காவல்துறையினர் செல்வியை தேடி வந்தனர். இந்தநிலையில், திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம் மன் கோவில் அருகில் காட்டுப்பகுதியில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது தான், பிணமாக கிடந்தது பசவ ராஜ் மனைவி செல்வி என்பது தெரிய வந்தது.. விசாரணையில், அந்த பகு தியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசியது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து கொலைக்கான கார ணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment