பட்டாசு சத்தத்தால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை 6 பேரை கடித்துக் குதறியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

பட்டாசு சத்தத்தால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை 6 பேரை கடித்துக் குதறியது

ஊட்டி,நவ.15- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த 12.11.2023 அன்று அதிகாலை 4 மணியள வில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக் கொண்டு ஓடியது. அப் போது எதிர்பாராதவித மாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. 

இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடி யாக வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட் டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங் கேயே பதுங்கியது. 

உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறை யினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

விரைந்து வந்த தீய ணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட் டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீய ணைப்பு வீரர்கள் முரளி (வயது 56), குட்டி கிருஷ் ணன்(வயது59), கண் ணன் (வயது54), விஜய குமார்(வயது32), வரு வாய் உதவியாளர் சுரேஷ் குமார்(வயது32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர் களை சக தீயணைப்பு மற் றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு முதலுத விக்கு பிறகு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது. அதில் குட்டி கிருஷ் ணன் மட்டும் தீவிர சிகிச் சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப் பக இயக்குநர் வெங்க டேஷ், இணை இயக்குநர் அருண், கால்நடை மருத் துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். பின் னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங் களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்கா ணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலையில் 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளி யேறியது.

இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதி வாகி இருந்தது. அதன் பின் னரே அனைவரும் நிம் மதி அடைந்தனர்.

வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையின ருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்ப குதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment