சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை

 சந்திரயான் - 3 திட்ட இயக்குநர்  வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு  அரசின்  ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை படித்த கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளித்தார்

சென்னை, நவ 10 இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு அறிவியல் ஆய்வா ளர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச் சியில் முத லமைச்சர் மு.க.ஸ்டா லின் பங்கேற்று பேசும்போது, சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,   திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்ப தாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்தியா விற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய 9 அறிவியல் ஆய்வாளர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று  (9.11.2023) வழங்கப் பட்டது. 

இந்த நிலையில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார்.  அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.அய்.டி., சென்னை அய்.அய்.டி. கல்லூரி மேனாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள் ளார். இதையொட்டி அறிவியல் ஆய்வாளர் வீரமுத்துவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.




No comments:

Post a Comment