குஜராத்தில் மழை - 20 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

குஜராத்தில் மழை - 20 பேர் உயிரிழப்பு

நவ்சாரி, நவ. 28 - குஜராத்தில் 26.11.2023 அன்று பெய்த பலத்த பருவ மழையால், பயிர்கள் கடும்  சேதத்தை சந்தித்துள்ள அதே நேரத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வுத் துறை யின் அறிக்கைபடி, தெற்கு குஜராத் மற்றும் சவுராட்டிரா மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை 27.11.2023 அன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. குஜராத் முழுவதும் பெய்த கனமழையால் பயிர்களும் பெரிய அளவில் நாசமாகியுள்ளன.  

குஜராத்தில் உள்ள 252 தாலுகாக் களில் 234 தாலுகாக்களில் 26.11.2023 அன்று மிகுந்த மழைப்பொழிவு பதிவா கியுள்ளதாக மாநில அவசரநிலை செயல்பாட்டு மய்யத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத், சுரேந்திரநகர், கெடா, தபி, பருச் மற்றும் அம்ரேலி போன்ற மாவட் டங்கள் குறிப்பாக 16 மணி நேரத்தில் 50 முதல் 117 மிமீ வரையிலான கனமழை பெய்தது

வடகிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி நிலைபெற்றுள்ளதா கவும், சவுராட்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வானிலை ஆய்வு மய்யம் கனமழை எச்சரிக்கை விடுத்த நிலையிலும் குஜராத்  மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத காரணத் தால் பலத்த சேதம் மற்றும் உயிரிழப் புகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்­.

No comments:

Post a Comment