வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி

வேலூர், அக். 13- 11.10.2023 அன்று காலை 11:00 மணியளவில் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு சார்பில் “மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி அளித்தல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் மருத்துவர் எஸ். பாப்பாத்தி அவர்கள் தொடங்கி வைத்து, அவர் கூறுகையில்:-

வேலூர், இராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக் கும், செவிலியர் மற்றும் 108 அவசர சிகிச்சை நுட்பனர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிலரங்கம் நடை பெற்றது.

மாரடைப்பு நோயைப் பொறுத்தவரை நேரம் மிக முக்கியமானது என்றும் அதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி விரிவாகப் பேசினர்.

இந்த பயிற்சி முகாமில் மாரடைப்பு நோயை துரி தமாக, திட்டவட்டமாக கண்டறியும் முறைகளும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நம் மருத்துவக் கல்லூரி இதய நோய் பிரிவை யும் மற்றும் மாவட்டத்திலுள்ள பிற மருத்துவம னைகளையும் ஒருங்கி ணைத்து மாரடைப்பு நோய்க்கு உடனடியாக விரைவாக செயல்பட்டு சிகிச்சை அளிப்பது குறித்து இதய பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் க.சபாபதி மற்றும் இதய நோய் பிரிவு மருத்துவர்கள் மருத்துவர் சபாஷ் சந்திர போஸ், மருத்துவர் இம்ரான் தியாசி ஆகியோர் இதய நோய்க்கு சிகிச்சை முறைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

No comments:

Post a Comment