கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 13, 2023

கரோனா தொற்றுக் காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை, அக். 13 - கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில், கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/  என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 11.10.2023 அன்று அறிவிப்பாணையை வெளி யிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கரோனா பேரிடர் தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கிராம சுகா தார செவிலியர் நியமனத் தில் ஊக்க மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை யில், “அனைத்து வகை யான அரசு மருத்துவமனைகள், கரோனா கேர் மய்யங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப் பெண் வழங்க வேண்டும். 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணிபுரிந்தவர்களுக்கு 4 மதிப்பெண், 18 - 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதத்திற்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு 5 மதிப் பெண்கள் கூடுதலாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், தங்க ளது சேவையை உறுதிசெய்யும் வகையில் கரோனா பணிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெற்று, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment