பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

பிற இதழிலிருந்து...

"துணிச்சல் பத்திரிகையாளர்கள்" - கி.வீரமணி

கொள்கைக்காக சுழன்றுகொண்டிருக்கிற 91 வயது இளைஞர். கொள்கைப் பிடிப்புள்ள கட்சிக்குத் தலைவர். தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பேசுகிறார்.

"முதலில் இந்த பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காக்கின்ற இந்தக் கூட்டத்திற்கு அழைத்தவுடனே, தயங்காமல் ஏற்றுக்கொண்டு இங்கே வந்திருக்கின்ற மூன்று பத்திரிகையாளர்களும் தனி வரலாறு படைத்திருக்கிறார்கள். மற்றவர்களை நாங்கள் பாராட்டினாலும்கூட. இதிலே சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், உடனடியாக இங்கே கேட்டவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

சில ஏட்டாளர்கள் 'வழக்கிலே இருந்து வெளியே வந்தால் போதும்... ஆகவே பாராட்டெல்லாம் வேண்டாம்' என்று பயப்படுகிற உணர்ச்சி உண்டு. ஆனால் இங்கே இருக்கிறவர்கள், துணிச்சலுக்கு பேர் பெற்ற பத்திரிகை யாளர்கள், சுதந்திரத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள். அந்த வகையிலே ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிவிட்டார், நம்முடைய சகோதரர் நக்கீரன் கோபால் அவர்கள்.

அந்தப் பத்திரிகையின் மீது அவர்கள் பாய்ந்ததன் மூலம் அவர்கள் நக்கீரனை மட்டும் குறிவைத்தார்கள் என்று நினைக்காதீர்கள்.. பத்திரிகைச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் குரல்வளையையும் ஏன் அவர்கள் நெரிக்க வேண்டும்? ஜனநாயகத்திலே நான்காவது தூண் என்று அறிவிக்கப்பட்டது Fourth Estate Press  என்பது மிக முக்கியமானது. எனவேதான் இந் தக் கூட்டம் ஒரே நாளில்... 24 மணி நேரத்திலே அறிவிக் கப்பட்டபோது, வெளியிலே விளம் பரப்படுத்தி அத்தனை பேரும் வந்திருக்கிறீர்கள். ஆகவே முதற்கண் இந்தப் பாராட்டு தளபதி அவர்கள், என்.ராம் அவர்களுக்கு, மற்ற எல்லோரும், பல நேரம் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிற வாய்ப்பு இல்லாதவர்களும் இருக்கலாம். ஆகவே முதலில் நான் இந்த பாராட்டை அனைவர் சார்பாகவும் இங்கு இருக்கிறவர்கள் மட்டுமல்ல, ஆங்கிலத்திலே ஒரு சொற்றொடர் உண்டு- To seek for the viral audience என்று அதேமாதிரி வெளியே இருக்கிற வர்கள், உலகம் முழுவதும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியை. அந்த வகையிலே அனைவர் சார்பாகவும் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து என்றால் எங்கள் மத்தியிலே, எந்த கொள்கை என்பது முக்கியமல்ல.. ஒரேயொரு 'ஒன் பாயின்ட் புரோகிராம்' என்கிற அடிப்படையிலே இன்றைய பாசிசத்தை வீழ்த்துவோம் என்ப தற்கு அடையாளமாகத்தான் முதலில் நம்முடைய நக்கீரன் கோபால் அவர்களுக்கு பாராட்டு.

அடுத்தபடியாக, முதல்முறையாக ஒரு போர்க் களத்திற்கு வருகிற உணர்வோடு வந்திருக் கிறார் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், தளபதி சகோதரர் அவர்கள். முதல் முறையாக பெரியார் திடலிலே பேச வரும்போதே.. உரிமைப் போருக்காக வந்திருக்கிறார். எனவே இது சாதாரண வழக்கு அல்ல. அப்படிப்பட்ட அவர்களையும், அதே போல 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் அவர்களுக்கு எங்கள் பெரியார் திடலி லே பாராட்டுன்னா.. ரொம்ப பேருக்கு வித்தியாசமா இருக்கும். ஏன்னா, அவரு கொள்கைய விட்டுட்டாரா, இல்ல நான் கொள்கைய விட்டுட்டேனா....? ரெண்டு பேருமே கொள்கைய விடல. நேற்று வரையிலும் ரெண்டு பேருக்கும் என்ன கொள் கையோ, அதே கொள்கைதான். நாளைக்கும் கொள்கைக்காகப் போராடு வோம். 'விடுதலை' அடிக்கடி 'இந்து' வுக்கு வைத்திருக்கிற பெயர் 'மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு' என்று. அவர்கள் எங்களைத் தாக்குவார்கள், அது வேறு செய்தி. அந்த உரிமை ரெண்டு பேருக் குமே உண்டு.

ஆனால் பத்திரிகை சுதந்திரம் என்று வரும்போது 'இந்து' ராம் வேறல்ல, வீரமணி வேறல்ல, விடுதலை வேறல்ல.

அது 140 ஆண்டு பத்திரிகை. நாங்கள் 85 ஆண்டு கால பத்திரிகை. 'ஜனசக்தி  80 ஆண்டு பத்திரிகை வரிசை யாக. 'முரசொலி 76, (கலைஞருடைய மூத்த பிள்ளை.) ஆக இப்படி வரி சையாக இந்த பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்துதான்... இது இயக்கக் கூட்டமல்ல, பத்திரிகையாளர்களின் உரிமைக் கூட்டம். ஆகவேதான் இந்த உரிமைப் போர் முழக்கம். அத்தனையும் எங்க ளுக்குப் பழக்கமானது. எல்லோருமே மிசாவைப் பார்த்தவர்கள், தடாவைப் பார்த்தவர்கள், பொடாவைப் பார்த்தவர்கள்... இந்த அத்தனை சட்டத்தையும் ஒழிப்பவர்கள். அதுதான் இதில் முக்கியமானது. அந்த அடிப்படையிலே மூவருக்கும் பாராட்டுச் சொல்லி, அதேபோல எங்களின் தோழராக இருக்கக்கூடிய தோழர் முத்தரசன் அவர்கள் மற்றும் நண்பர்கள். தோழர் வைகோ அவர்கள் வழக்கறிஞராகப் போனார்கள். அந்த அளவிலே அவர் இன்றைக்கு இல்லா விட்டாலும் அவருக்கும் சேர்த்து நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைச் சொல்லுகிறோம்.

எவ்வித தியாகத்துக்கும் தயாராக என்றைக்கும் இருக்கக்கூடிய சிறைப் பறவை அன்பிற்குரிய சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களே! அவரை மட்டும் அழைத்துப் போனால் அவர் தனிமைப் படுத்தப்பட்டார் என்ற குற்றத்துக்கு ஆளாவோம் என்பதற்காக அவருடைய சக தோழர்கள் அத்தனை பேரையும், அந்த அலுவலகத்திலுள்ள 35 பேர் மீதும் வழக்கு. நான் தோழர் கோவி.லெனின் அவர்களைக் கேட்கிறேன்... இந்த பெருக்குற அம்மா இருக் குறாங்களா அதுல..? அல்லது ஆபீஸ் காவலாளி இருக்கிறாரா? அந்த ரெண்டு பேரோட பேரும் தெரியல போல அவங்களுக்கு.

ஒரு பத்திரிகை அலுவலகம். அதுல என்ன கொடுமைன்னா... அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி தமிழ்நாட்டுல நடந்திருக்கிறதா? என்கிற கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டிய இந்த நேரத்திலே, சில செய்திகளை மட்டும் நீங்கள் அறிவார்ந்த விளக்கத்திற்கு ஆளாக வேண்டும் என்று சொல்கிறோம். கருத்துரிமை. மிகத்தெளிவாக, இங்கே சொன்னார்கள், நம்முடைய கோபால் அவர்கள் சொன்னார்கள். இது ரொம்ப கொடு மையான செய்தி, அதுகூட தெரியாது, நான் தளபதி அவர்கள் போன பிறகு தான் பார்த்தேன் தொலைக் காட்சியில். அவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர் என்கிற முறையில உடனடியாக. திராவிட முன்னேற்றக் கழக கட்சித் தலைவர். ரெண்டாவது, எதிர்க்கட்சித் தலைவர்! ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற முறையிலே அவர்கள் கருத்துச் சுதந்திரம் எல்லாவற்றுக்கும் நாம எதிர்க்கட்சித் தலைவரைத் தான் அணுகணும், யாராக இருந்தாலும் அதை சிறப்பாக அவர்கள் செய்துகொண்டிருக்கிற நேரத்திலே, அவர் போன உடனே காவல்துறை அனு மதிச்சிட்டாங்கன்னுதான் நாங்க நினைச்சுக் கிட்டிருந்தோம் இதுவரையில ஆனா இப்பத்தான் தெரிஞ்சது, ஒரு பெரிய உண்மை. இவர் வக்கீல் குமாஸ்தா ஆன மாதிரி, அவர் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார் என்று செய்தியைச் சொன்னார். அதுல ஒண்ணும் வித்தியாசம் இல்ல. எப்படின்னு கேட்டா. ஜனநாயகமே இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த நாட்டில் இருந்துகொண்டிருக் கிறது. ஆகவேதான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்ப வர்களை அங்கே போய் பார்க்கக்கூடிய அளவிலே இன்றைக்கு நடந்திருக்கிறது.

மிக முக்கியமாக 124 என்றால் என்ன? அதை மட்டும் அருள்கூர்ந்து புரிந்துகொள்ளுங் கள். பத்திரிகை சுதந்திரத்தை எப்படியெல்லாம் தாக்குகிறார்கள்? அதுவும் ஆளுநர் மாளிகையில இருந்து உத்தரவு வருகிறது என்றால், ஆளுநர் ஆட்சியா இப்போது நடக்கிறது? மக்களாட்சி அல்லவா! இதற்கு இந்த முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் சங்கடப்பட வேண்டாமா. வெட்கப் பட வேண்டாமா? அங்கேயிருந்து உத்தரவு போடு கிறார்கள் என்று சொன்னால்.. அந்த 124-ன்படி அவர்கள் செய்கிறார்கள். இதோ கையில் இருக்கிறது அந்த ஆதாரத்தை திரு.ராம் அவர்கள்கூட எடுத்து சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

'124-ஆவது பிரிவின்படி நீங்கள் வழக்கு தாக்கல் செய்யுங்கள்' என்றே உத்தரவு போடுகிறார்கள்.

இந்த 124 பிரிவு என்ன? அதை மட்டும் படிக் கிறேன், கேளுங்க.

Assaulting President, Governor etc... with intent to compel or restrain the exercise of any lawful power

சட்டபூர்வமாக அவருடைய பணியை செய்யும் நேரத்தில் கவர்ன ரையோ, குடியரசுத் தலைவரையோ குறுக்கிட்டுத் தாக்கினால், அதுதான்... வேலை செய்ய விடாமல் தடுத்தல் அப்படின்னு இருக்கு.

'எந்தப் பணியை அவர் செய்யப் போனாரு? கோபால் எதத் தடுத்தாரு?" இப்ப அதுதான் ரொம்ப சிக்கலான சிக்கல். அதுதான் ரொம்ப முக்கியமான விசயம். ஏன்னா வழக்கு இன்னமும் முடியல. நாங்களே வழக்கறிஞர்க ளாகச் சென்று வாதாடினாலும் வாதாடுவோம் அந்த வழக்கில் நிச்சயமாக. இங்கே பல வழக் கறிஞர்கள் இருக்கிறோம். ஏன்னா எங்களுக்கு பல பங்குகள் உண்டு, பல பாத்திரங்கள் உண்டு. அந்த முறையிலே பார்க்கிறபோது, இதுல தெளிவுபடுத்த வேண்டியது என்னன்னா?

Who ever with the intention of inducing or compelling the President of India  அதுதான். அவரு வரும்போது நான் குறுக்கிட்டேன், நிறுத்துனேன், தடுத் தேன்னு சொன்னாகூட போதாதுங்க. intention  என்று குற்ற வழக்கிலே சொல்வார்கள்... ஊக்கம் இருக்கணும், அவர தடுக்கணும், தடுத்தாக வேண் டும்னு. என்ன இந்தப் படம் போட்டத, தடுத்திருக்காருன்னா.. சிக்கல் எங்க இருக்குன்னு மிகத்தெளிவா புரிந்து கொள்ள முடியும்... அதுதான் முக்கியம். 

அதுமட்டுமில்ல 124 எப்படிப் பொருந்தும்?

நன்றி: 'நக்கீரன்' 2023 அக்.25-27  


No comments:

Post a Comment