சிதம்பரம் கழக மாவட்டம், புவனகிரி நகர கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிர்வாதம் அவர்களின் மூத்த மகன் ஆ.இ.ராஜேந்திரன் (வயது 52) 3.10.2023 அன்று உடல் நலமின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மறைவுற்ற ராஜேந்திரனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட கழக செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட இணை செயலா ளர் யாழ் திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோ.நெடுமாறன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் ஏ.பி.ராமதாஸ் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். மகனை இழந்து வாடும் பெரியார் பெருந் தொண்டர் ஆசிர்வாதத்திற்கு ஆறுதல் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment