பெரியார் சிலை உடைப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல் சேதப்படுத்தியவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

பெரியார் சிலை உடைப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல் சேதப்படுத்தியவர் கைது

பெரம்பலூர்.அக்.4- பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோ ருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்  2.10.2023 அன்று பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டது. மேலும் சிலையை சுற்றி சிவப்பு நிற சால்வை ஒன்று கட்டப் பட்டிருந்தது. அருகே இருந்த எம்.ஜி.ஆர். சிலையிலும் வெள்ளை நிற சட்டை ஒன்று தொங்கவிடப்பட் டிருந்தது. அண்ணா சிலை அருகே பேண்ட் ஒன்றும் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செய லாளர் இளம்பை ரா.தமிழ்ச் செல்வன் தலைமையில் கட்சியினர் சிலைகளுக்கு முன்பு இரவில் கூடினர். பின்னர் அவர்கள் பெரியார் சிலையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்து தூய்மைப் படுத்தினர். அதனை தொடர்ந்து பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலை களுக்கு மாலை அணிவித்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து அ.தி. மு.க.வினர் சிலைகளின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீ ரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பெரியார் சிலையை சேதப்படுத்தி, அவமதித்த அடையாளம் தெரியாத மனிதர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப் பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் உட் கோட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பழனிசாமி தலைமையிலான காவல்துறையினர் அ.தி.மு.க.வினரி டம் பேச்சுவார்த்தையில் ஈடுபட் டனர். சிலையை சேதப்படுத்தி, அவமதித்த நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

காவல்துறையினர் பாதுகாப்பு

அந்த பகுதியில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட் டும் விசாரணை நடத்தி குன்னம் தாலுகா ஒகளூரைச் சேர்ந்த அனுசந்திரன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிலைகளின் முன்பு பாதுகாப்பு பணிக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழ கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment