இதுதான் ஹிந்து மகாசபையின் இலட்சணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

இதுதான் ஹிந்து மகாசபையின் இலட்சணம்!

பகலில் நெற்றியில் பட்டை - காவி உடை அணிந்து ‘பக்திப் பெருக்கு' இரவில் மதுபோதையில் அத்துமீறல்!

திருவண்ணாமலை, அக்.10 திருவண்ணாமலை பே கோபுரம் 11 ஆவது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வாசுதேவன். (வயது 36). இவர் ஹிந்து மகா சபாவில் மாவட்ட தலை வராக உள்ளார். இவர் சமூக வலைதளத்தில் டிக்டாக் செய்து தனது காட்சிப் பதிவுகளை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக, மது போதையில் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலையில் அதிவேகத்தில் வலம் வந்த வாசுதேவன், அதனை தமது நண்பர்கள் மூலம் காட்சிப் பதிவு செய்துள்ளார்.

மேலும், திருவண்ணாமலை பே கோபுரம் சாலை பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று, அங்கு போக்குவரத்து சீர மைப்புக்காக வைத்திருந்த சாலை தடுப்பான் (பேரிகார்டு) மீது மோதியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தபோதும் காட்சிப் பதிவை நிறுத்தவில்லை. அங்கிருந்து எழுந்து சென்று, அந்தப் பகுதியில் இருந்த சாலை தடுப்புகளை உதைத்துக் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சிப் பதிவை 'கெத்தா நடந்து வரான், கேட்டை எல்லாம் கடந்து வரான், மரணம் மாசு மரணம், டப்பு தரணும்' எனும் ரஜினியின் பாடல் பின்னணியில் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த காட்சிப் பதிவு ரீல்ஸ் சமூக வலை தளத் தில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டவரை கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பேரில், திருவண்ணாமலை நகர துணை காவல் கண் காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர், சாலையில் அத்துமீறலில் ஈடு பட்டு காட்சிப் பதிவை வெளியிட்ட, ஹிந்து மகா சபை மாவட்ட தலைவர் வாசுதேவனை கைது செய்தனர்.

நெற்றியில் பட்டை, காவி உடை என பகல் முழுவதும் பக்திப் பெருக்காக வலம் வரும் ஹிந்து மகா சபை மாவட்ட தலைவர் வாசுதேவன், இரவில் மது போதையில் இதுபோன்ற அத்து மீறலில் ஈடுபடுவது காவல்துறையினர் விசார ணையில் தெரியவந்தது. 

மேலும், சமூக வலைதளத்தில் ''லைக் மற்றும் கமென்ட்'' கிடைக்கும் என்ற ஆசையில் காட்சிப் பதிவை எடுத்ததாக அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.அதனைத்தொடர்ந்து,பொது சொத்துக்களைசேதப்படுத்தியது,பொதுமக் களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் ஹிந்து மகா சபை தலைவர் வாசுதேவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதியரசர் முன்னிலையில் ஆஜர்படுத்தி,வாசுதேவனை சிறையில் அடைத் தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment