மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

மோடி ஆட்சியில் ஏழை-பணக்காரர்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, அக். 25- மோடி அர சின் கீழ் பெரும் பணக் கார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

கடந்த 2013-2014 ஆண்டு முதல் 2021 - 2022 ஆண்டு வரையிலான பொதுவில் கிடைக்கும் வருமான வரிக்கணக்கு தகவல்கள், ராகுல் காந்தி யின் இந்திய ஒற்றுமை பயணத்தின் முக்கியமான கருப்பொருளான வரு மான சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது என்று காங் கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடி அரசின் கீழ், பெரும் பணக்கார்களுக் கும் நடுத்தர வர்க்கத்தின ருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தி ருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கான ஆதாரம் இதோ: 

2013--2014ஆம் ஆண் டில் வருமான வரி செலுத் தியவர்களில் டாப் 1 சதவீதத்தினர் 17 சதவீதம் மொத்த வருமானம் ஈட் டியுள்ளனர். 2021-2022 ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்தியோரில் முதல் 1 சதவீதத்தினரின் மொத்த வருமானம் 23 சதவீதமாக உயர்ந்துள் ளது. மேலும், நடுத்தர வர்க்கத்தினரை விட பெரும் பணக்கார்களின் வருமானம் வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த 2013-2014 ஆண்டு முதல் 2021-2022 ஆண்டு வரை வருமான வரி செலுத்தி யோரில் முதல் 1 சத வீதத்தினரின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 13 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இது வரி செலுத்து வோரின் கடைசி 25 சதவீ தத்தினரின் வருமானத்தை விட 60 சதவீதம் அதிகமா னது. உண்மையில், பண வீக்கத்தை சரிசெய்த பின் னர், வரிசெலுத்துவோரில் கீழே இருக்கும் 25 சத வீதத்தினரின் மொத்த வருமானம் 2019ஆம் ஆண்டை விட 2022இ-ல் குறையும் என எதிர்பார்க் கப்பட்டது. அவர்களின் மொத்த வருமானம் 11 சதவீதம் குறைந்துள்ளது. 2019 நிதியாண்டில் ரூ.3.8 கோடியாக இருந்த வரு மானம் 2022ஆ-ம் ஆண்டு ரூ.3.4 கோடியாக குறைந் துள்ளது. 

இதற்கிடையில், வரு மான வரிசெலுத்துவோ ரில் முதல் 1 சதவீதத்தின ரின் உண்மையான வரு மானம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 நிதியாண்டில் ரூ.7.9 கோடியாக இருந்த வருமானம், 2022 நிதி யாண்டில் ரூ.10.2 கோடி யாக உயர்ந்துள்ளது. புள்ளி விபரங்கள் பொய் சொல்லாது; பிரதமர் மட்டுமே அதனை செய் வார்" என்று கூறியுள்ளார். 

கடந்த சில ஆண்டு களாக பெரும் பணக்கார் களுக்கும் நடுத்தர வர்க் கத்தினருக்கும் இடையிலான வருமான வேறு பாடு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment