லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்கும்படி உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்கும்படி உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, அக்.19  கோடம்பாக்கத்தை சேர்ந்த சட்டப் பேரா சிரியரான ஆர்.கார்த்தி கேயன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1964-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, ஊழ லுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், கடந்த 2020_20-21ஆம் ஆண்டில் மட்டும் 553 வழக்குகளை லஞ்ச ஒழிப் புத் துறை பதிவு செய்திருக் கிறது என்றும் குறிப்பிட் டுள்ளார். 

லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்யும் வழக்கு களின் அடிப்படையில், அமலாக் கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. 

இதில் பல வழக்கு களில் முதல் தகவல் அறிக்கை கிடைக்காத தால் அமலாக்க துறை யால் வழக்கு தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளதால், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக் கைகள், சேகரிக்கும் ஆவணங்களை அமலாக் கத்துறைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.  

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக் கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்க எந்த சட்டப்பிரிவும் அனுமதி வழங்கவில்லை என்ப தால், முதல் தகவல் அறிக் கைகளை அமலாக்கத் துறைக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது என உத்தர விட்டது.

No comments:

Post a Comment