அம்பேத்கர் எழுதிய ‘ஜாதியை ஒழிக்க வழி’ புத்தகத்தை மோடி படிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

அம்பேத்கர் எழுதிய ‘ஜாதியை ஒழிக்க வழி’ புத்தகத்தை மோடி படிக்க வேண்டும்

ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ்குமார் ஜா அறிவுறுத்தல்

புதுடில்லி,அக்.27- ஜாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் மோடி கடந்த 24.10.2023 அன்று பேசியிருந்தார். இதனையடுத்து ஜாதிவெறி குறித்த பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா 25.10.2023 அன்று பதிலளித்துள்ளார்.

ஜாதி குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு பிரதமர் மோடி அதுகுறித்து கொஞ்சமேனும் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சமச்சீரற்ற வளர்ச்சியால்தான் பிராந்தியவாதம் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் ஏற்படுகின்றன. அதன் காரண மாகவே பிராந்திய கட்சிகள் உரு வாகின்றன.

அரசு அமைப்புகளில் ஏன் ஓபிசி மக்களுக்கான உரிய பங்கு இல்லை என்று கேட்டால் இது ஜாதி வெறியா? பிரதமர் மோடி இவ்வாறு பேசி திசைதிருப்புவதை தவிர்க்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத் திற்காக அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'ஜாதியை  ஒழிக்க வழி' புத்தகத்தை படிக்குமாறு மோடிக்கு பரிந்துரைக்க விரும் புகிறேன் என மனோஜ் குமார் ஜா தெரிவித் துள்ளார்.

1936-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற ஜாட்-பட்-தோடக் மண்டல் மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அப்போது முன்னதாகவே அவர் உரையை எழுத்து வடிவில் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கோரியதால் உரையை தயாரித்து அனுப்பினார் அம்பேத்கர்.

 அம்மாநாட்டில் பேசுவதற்காக அழைக்கப்பட்டு, பின்னர் அவர் உரையில் சில வாசகங்களைத் திருத்திய பின்னரே வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக் கப்பட்டு, அதற்கு  அந்த உரையைத் திருத்த மறுத்த அம்பேத்கருக்கு அந்த மாநாட்டில் பங்கேற்று உரை யாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் தயார் செய்த  Annihilation of Caste  என்கிற தலைப்பிலான  அவ்வுரையைக் கொணர்ந்து, தந்தைபெரியார் ‘ஜாதியை ஒழிக்க வழி’ எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டார்.  தமிழில் வெளியான அம்பேத்கரின் முதல் நூலும் அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அந்த நூலையே பிரதமர் மோடியை படிக்குமாறு ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் ஜா அறிவுறுத்தி யுள்ளார்.


No comments:

Post a Comment