சென்னை மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

சென்னை மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா

சென்னை, அக். 31- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்களுக்கான 2023-2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற 437 பேருக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கினார். 

சென்னை மாநகராட் சியில் பணிபுரியும் அலுவ லர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2023-2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கள் 09.10.2023 அன்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வால் நேரு பூங்கா விளை யாட்டுத் திடலில் கொடி யேற்றி தொடங்கி வைக் கப்பட்டது.

சென்னை மாநகராட் சியில் பணிபுரியும் அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பி னர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு 2023-2024ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கள் தொடங்கப்பட்டு, 9.10.2023 முதல் 27.10.2023 வரை கையுந்து பந்து, கால்பந்து கிரிக்கெட், டென் னிகாய்ட், எறிபந்து, கோ-கோ, கபடி, இறகுப் பந்து, நீச்சல் போட்டி, சதுரங்க ஆட்டம், கேரம், தடகள விளையாட்டுக்கள், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர்ஸ், லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் மாநகராட்சியில் பணி புரியும் அலுவலர்கள் மற் றும் பணியாளர்களில் 1,109 ஆண்கள், 581 பெண் கள் என 1,690 நபர்களும், மாமன்ற உறுப்பினர்க ளில் 55 ஆண்கள், 20 பெண்கள் என 75 நபர் கள் என மொத்தமாக 1,765 நபர்கள் கலந்து கொண்டு விளையாடி னர். இவற்றில் அலுவ லர்கள் மற்றும் பணியா ளர்களில் 247 ஆண்கள், 169 பெண்கள் என 416 நபர்களும், மாமன்ற உறுப் பினர்களில் 9 ஆண்கள், 12 பெண்கள் என 21 நபர்கள் என மொத்தமாக 437 நபர்கள் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்றுள் ளனர்.

விளையாட்டுப் போட் டிகளில் வெற்றி பெற்ற அலுவலர்கள், பணி யாளர் கள் மற்றும் மாமன்ற உறுப் பினர்களைப் பாராட்டி மேயர் பிரியா சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை நேற்று (30.10.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட் டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

No comments:

Post a Comment