அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இல்ல மணவிழா வரவேற்பு! கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இல்ல மணவிழா வரவேற்பு! கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

 

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-செந்தமிழ் செல்வி இணையர் மகள் டாக்டர் எம்.ஆர்.கே.பி.கண்மணி, சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்.கார்த்திக்-நீதிபதி திலகவதி இணையர் மகன் டாக்டர் கே.சித்தார்த் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 25.10.2023 புதன் காலை நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 24.10.2023 செவ்வாய் மாலை திருவான்மியூர் சிறீராமச்சந்திரா கண்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, கடலூர் மாநகரத் தலைவர் தென் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வேலு, வடலூர் வழக்குரைஞர் திராவிட அரசு, மறுவாய் க.சேகர் ஆகியோர் உள்ளனர்.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தார்.


No comments:

Post a Comment