'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

'நீட்' - மற்றொரு மாணவி தற்கொலை இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ?

கள்ளக்குறிச்சி, அக். 31- நீட் தேர்வுக்கு சரிவர படிக்க முடியாததால் நஞ்சு அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18). இவர் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியுள்ளனர் இதில் மனம் உடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனாலும் தொடர்ந்து மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். உடற் கூராய்வுக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் தமிழ் நாட்டில் 3  மாணவர்கள் நீட் தேர்வால் தன்னுயிர் மாய்த்துள்ளனர்.
No comments:

Post a Comment