சென்னை, அக். 12- இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தவிக்கும் 84 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் 8760248625, 9940256444, 9600023645 மூலமாகவும், மின்னஞ்சல் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இதன்மூலம் அங்குள்ள தமிழர்களிடம் தற்போது தொடர்பு கொண்டு, சுமார் 84 நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அங்குள்ள சூழ்நிலை மற்றும் ஒன்றிய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

No comments:
Post a Comment