இதுதான் பி.ஜே.பி. - 8 கொலை வழக்குகள் ஆசாமிக்கு பி.ஜே.பி.யில் முக்கிய பதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

இதுதான் பி.ஜே.பி. - 8 கொலை வழக்குகள் ஆசாமிக்கு பி.ஜே.பி.யில் முக்கிய பதவி

காஞ்சிபுரம், அக். 7- பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து, ரவுடி படப்பை குணாவிற்கு பா.ஜ.க.வில் பதவி வழங்கப்பட் டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப் பெரும்புதூர் அருகே மதுரமங் கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் துணையுடன் அதிமுக பிரமுகராக வும் தொழில் நிறுவனங்களை மிரட்டி தொழிலதிபராகவும் வலம் வந்தார் இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டு வது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள் மற்றும் நிறு வனங்களை மிரட்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளது.

இந்த 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இதனி டையே இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என தெரிந்து கொண்டு, படப்பை குணா சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் சரணடைந் தார். சிறையில் இருந்த படப்பை குணா பிணையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியே வந்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பெரும்பெரும்புதூரில் நடைபெற்ற, பாஜக கூட்டம் ஒன்றில் பாஜகவில் இணைத்துக் கொள்ள வந்ததாக தகவல் வெளி யாகி இருந்தது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில தலைவர் கே அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் ஒப்புதலின்படியும், காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனைப் படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனைப் படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக படப்பை குணா (எ) குணசேகரன் நியமிக்கப்படுவதாக " அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக, படப்பை குணா நியமிக்கப்பட் டுள்ளார். சமீபத்தில் 50க்கும் வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பா.ஜ.க. மாநில தாழ்த்தப்பட்டோர் அணி மாநில செயலாளராக, நியமிக்கப்பட்ட நிலையில் தற் போது ரவுடி படப்பை குணா விற்கும் பதவி வழங்கப்பட்டதால் மீண்டும் மீண்டும் தமிழ்நாடு பா.ஜ.க. ரவுடிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

No comments:

Post a Comment