இதுதான் கடவுள் சக்தி! கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மூவர் விபத்தில் மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

இதுதான் கடவுள் சக்தி! கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மூவர் விபத்தில் மரணம்

புதுக்கோட்டை, செப். 30- கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத் தில் தாய் - மகள் உள்பட 3 பேர் இறந் தனர். சிவகங்கை அருகே உள்ள ஒக் கூரை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்த வர் அஞ்சலை என்கிற ராஜேஸ்வரி (வயது 45). இவரது மகன்கள் முகிலன் (22), ஆதீஸ்வரன் (14), அகிலன் (17). இந்தநிலையில் அஞ்சலை தனது மகன் களுடன் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையொட்டி முத்துபட்டியை சேர்ந்த சந்தோஷ் (25) என்பவருடைய காரில் நேற்று (29.9.2023) காலை அஞ்சலை தனது 3 மகன்களுடன் பேரையூர் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் கோவிலில் இருந்து மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு அதே காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருச்சி-ராமேசுவ ரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமண சமுத்திரம் செபஸ்தியார்புரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மதுரையிலிருந்து பய ணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனி யார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று நேருக்கு நேர் கார் மீது மோதி ஏறி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. 

மேலும் காரில் சிக்கிக் கொண்ட வர்கள் வலியால் அலறி துடித்தனர். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைய டுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காரினுள் இடிபாடுகளில் சிக்கி இருந்த வர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனைதொ டர்ந்து திருமயம் தீயணைப்பு துறை யினருக்கும், நமண சமுத்திரம் காவல் துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொக் லைன் எந்திரம் மூலம் பேருந்தை தூக்கி நிறுத்தினர். பின்னர் காருக்குள் பார்த்த போது சந்தோஷ், முகிலன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, படுகாயமடைந்த அஞ்சலை, ஆதீஸ்வரன், அகிலன் ஆகியோரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். 

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சலை பரிதா பமாக இறந்தார். இதனால் பலி எண் ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து ஆதீஸ்வரன், அகிலன் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்து நமண சமுத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய தனியார் பேருந்தில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியானது.

இதில் பேருந்து, கார் மீது மோதிய காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது. காட்சிப் பதிவில் கார் மீது பேருந்து ஏறி மோதி சிறிது தூரம் வரை இழுத்து சென்று நிற்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிப் பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது.

No comments:

Post a Comment