கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம்

பெங்களூரு,செப்.2- கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓராண்டுக்குள் பெண்களைவிட ஆண்கள் அதி களவில் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கரோனாவின் 3 அலைகள் ஏற் பட்டபின்பு நாட்டில் உள்ள 31 கரோனா மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ்க்கு பின் இறந்த கரோனா நோயாளிகளின் விவரங் களை பெற்று அய்சிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இது குறித்து அய்சிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் அபர்னா முகர்ஜி கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றின் போது, பெண்களைவிட ஆண் களே கடுமையான நோய் பாதிப் புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பார்த் தோம். இவர்களில் பலர் இறப்புக்கு கரோனாதான் காரணம் என உறு தியாக கூற முடியாது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர் களின் இறப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வெளியேறி ஓராண்டு நிறைவு செய்த 14,419 பேரை தொடர்பு கொண்டதில், 942 பேர் (6.5%) இறந்திருந்தனர். இவர்களில் 616 பேர் ஆண்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களும், மிதமானது முதல் கடுமையான கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களே அதிகம்.

கரோனா தடுப்பூசியின் பாது காப்பு திறன் குறித்த ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. கரோனா பாதிப்புக்கு முன் தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் உயிரிழக்க வில்லை.

முந்தைய ஆய்வுகள் எல்லாம், தடுப்பூசி இறப்பிலிருந்து எப்படி காப்பாற்றியது என்பதில் கவனம் செலுத்தியது. ஆனால், தற்போ தைய ஆய்வுகள் கரோனா பாதிப் பில் இருந்து மீண்டவர்கள் இடையே இறப்பை பற்றி ஆராய்கிறது. கரோ னாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர்களில் சிலர் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்திருந்தனர்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் இறந்தது குறைவு என்பதை எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருந் தாலும், அது ஓரளவு எதிர்ப்பு சக்தியை வழங்கியுள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

2 ஆண்டுக்குப் பின்பும் சிக்கல்

கரோனா பாதிப்புக்கு ஆளான வர்கள் 2 ஆண்டு கழித்தும் சிக் கலை சந்தித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு நீண்ட காலம் உள்ளது உண்மை. கரோ னாவால் பாதிக்கப்பட்டவர்கள் 

2 ஆண்டுகளுக்குப் பிறகும் நீரிழிவு, நுரையீரல் பிரச் சினை, ரத்தம் உறைதல், உடல் சோர்வு, இரைப்பை பாதிப்பு, தசை வலிப்பு போன்ற நீண்டகால கரோனா தொடர்பான பிரச்சி னைகளை சந்திக்கும் அபாயம் உள் ளது என அமெரிக்கா தலைநகர் வாசிங்டன் மருத்துவப் பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.

No comments:

Post a Comment