மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்

சென்னை,செப்.27- தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் 39 ஓதுவார்களை நியமித்து உள்ளார். இதில் 10 ஓதுவார்கள் பெண்கள். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 20 ஓதுவார்கள் கோவில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட் டம், குன்னத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவரது மனைவி சி.சிவரஞ்சனி, சென்னை மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவி லில் ஓதுவாராக நியமிக் கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெரம்பலூர் அரசு இசை பள்ளியில் ஆசிரி யர் நடராஜனிடம் 3 ஆண்டுகள் படிப்பான தேவாரம் பயின்றுள் ளேன். ஏற்கெனவே பி.எஸ்சி., பி.எட். பட்டப் படிப்பும் படித்து உள் ளேன். கோவில்களில் ஓதுவார் பணிக்கு விண் ணப்பித்து இருந்தேன். இந்து சமய அறநிலை யத்துறை அமைத்துள்ள கமிட்டி நடத்திய தேர் வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். அறநிலை யத்துறையில் இன்னும் அதிகம் பெண் ஓது வார்கள் பணிக்கு வர வேண்டும். தமிழ்நாடு அரசின் வெற்றிப்பய ணம் தொடர வேண்டும்' என்றார்.


No comments:

Post a Comment