உதயநிதிஸ்டாலின் குறித்த தவறான செய்தி-மன்னிப்பு கேட்டது 'டைம்ஸ் நவ்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

உதயநிதிஸ்டாலின் குறித்த தவறான செய்தி-மன்னிப்பு கேட்டது 'டைம்ஸ் நவ்'

தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸனாதனம் குறித்துப் பேசியதை வட இந்திய முன் னணி ஊடகங்கள் போலியாக திரித்து தகவலை வெளியிட்டு வருகிறது. இதற்கு திமுக வழக் குரைஞர்கள் அணி போலி செய் திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற் பாடுகள் செய்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியாவின் -- டைம்ஸ் நவ் (Times Now)ஆங்கில செய்தி தொலைக்காட்சி 5.9.2023 அன்று நண்பகலில் செய்தி ஒன்றை வெளியிட்டது, அதில் உதயநிதி ஸ்டாலின் மீது இந்தியாவின் தலைமை நீதிபதி தானே முன் வந்து வழக்குப்பதிவு செய்ததாகவும் இதனால் உதய நிதி கைது செய்யப்படப்போவ தாகவும் பரபரப்பாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டது, 

முக்கியமாக அமைச்சர் உதயநிதி திருநெல்வேலியில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று கொண்டு இருந்த போது வெளியான இந் தச் செய்தியால் அவர் நிகழ்ச்சி யில் கலந்துகொள்வாரா என்ற கேள்வியும் எழுந்தது.  ஆனால் இந்தச்செய்தி தொடர்பாக திமுக எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை.  

இந்த நிலையில் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாகவே முன்வந்து உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக செய்தி ஒன்றை (காட்சிப்பதிவு) வெளியிட்டோம். அந்த வீடியோவை திரும்பப்பெறுகிறோம். 

தவறாக வந்த இந்த செய் திக்கு மன்னிப்புக்கோருகிறோம் என்று செய்தி வெளியிட்டுள் ளது, தனது யூ டியூப் பக்கத்திலும் மன்னிப்புக் கோரி செய்தி வெளி யிட்டுள்ளது.

No comments:

Post a Comment