செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

செய்திச் சுருக்கம்

தயாராக...

தமழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்றுநோய்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளனார்.

உயர்வு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 30ஆம் தேதி காலை நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான துணைத் தேர்வின் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித் தவர்களின் முடிவுகள் 4ஆம் தேதி திங்களன்று வெளி யாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுக்கான...

லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளி யிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணி தேர்வா ணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும்.

மாற்றம்

தமிழ்நாடு தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன், ஒன்றிய அரசின எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளராகவும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு.

திரும்பியது

வங்கிகளில் இதுவரை 93 சதவீத ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கட்டுப்பாடுகள்...

மடிக்கணினி, பர்சனல் கம்ப்யூட்டர், மைக்ரோ கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட கம்ப்யூட்டர் வகைகளை இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது என ஒன்றிய அரசின் வெளிநாடு வர்த்தக இயக்குநரக அதிகாரி தகவல்.


No comments:

Post a Comment