ஆர்ப்பாட்ட முழக்கங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் 'விஸ்வ கர்மா யோஜனா' என்ற குலக் கல்வித் திட்டத்தைக் கண்டித்து அனைத்துக் கட் சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் (6.9.2023)

சாய்ப்போம் சாய்ப்போம்

சனாதனத்தைச் சாய்ப்போம்!

சமைப்போம் சமைப்போம்!

சமதர்மத்தைச் சமைப்போம்!

விஸ்வகர்மா யோஜனா 

குலக்கல்வித் திட்டமே!

செருப்புத் தைப்பவர் பிள்ளைகள்

செருப்புத் தைக்கத்தான் வேண்டுமா?

நீதிபதி ஆகக் கூடாதா?

மலம் அள்ளுவோர் பிள்ளைகள்

மலம் அள்ளத்தான் வேண்டுமா?

டாக்டர் ஆகக் கூடாதா?

முடி திருத்துவோர் மகன் 

முடி திருத்தத்தான் வேண்டுமா? 

அய்.ஏ.எஸ் ஆகக் கூடாதா?

அய்.பி.எஸ் ஆகக் கூடாதா?

பிரதமர் மோடி அண்ணாச்சி

ஆண்டுக்கு இரண்டு கோடி

வேலைவாய்ப்பு என்னாச்சு

வேலைவாய்ப்பு என்னாச்சு?

தோல்விகளைத் திசை திருப்ப

விஸ்வகர்மா திட்டமா?

ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

அரசியல் சட்டம் கூறுகிற

மதச்சார்பற்ற தன்மையை

மதச் சேற்றில் புதைக்காதே! 

அரசியல் சட்டம் கூறுகின்ற 

விஞ்ஞான மனப்பான்மையை வீழ்த்தாதே!

அஞ்ஞான இருளைப்  பரப்பாதே!

காப்போம் காப்போம்

சமூகநீதியைக் காப்போம்!

ஒழிப்போம் ஒழிப்போம்

குலக்கல்வித் திட்டத்தை ஒழிப்போம்!

பள்ளிக் கல்வியை ஒழித்துக்கட்ட 

தேசியக் கல்விக் கொள்கையாம்!

மருத்துவக் கல்வியில் நுழைவதைத் தடுக்க

நீட் நுழைவுத் தேர்வாம்!

பல்கலைக்கழகப் படிப்பை மறுக்க

கியூட் நுழைவுத் தேர்வாம்!

மீறி யாரும் படிக்க வந்தால்

ஆசைகாட்டித் தூண்டில் போடும்

குலக் கல்வித் திட்டமான

"விஸ்வ கர்மா யோஜனா!"

ஆபத்து ஆபத்து

பிள்ளை பிடிக்கும் பாஜகவால்...

ஆட்கொல்லி ஆர்.எஸ்.எஸ்.சால்...

கல்லூரிக் கல்விக்கு ஆபத்து!

சமூகநீதிக்கு ஆபத்து!

ஏமாறாதீர் ஏமாறாதீர்!

குலத் தொழிலை ஊக்குவித்து

ஜாதியைக் காக்கத் துடிக்கின்ற 

பாஜகவிடம் ஏமாறாதீர்!

பலியாகாதீர்! பலியாகாதீர்!

பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்தை 

ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்தை

முடக்கப்பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்சின்

சதித்திட்டத்திற்குப் பலியாகாதீர்!

போராடுவோம்! ஒன்றுபடுவோம்!

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

இவ்வாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


No comments:

Post a Comment