இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா குற்றச்சாட்டு

 அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை சமத்துவம் போன்றவற்றை நீக்குவதா? 

சென்னை, செப். 28  அரசமைப்புச் சட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியால் ஆபத்து என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமையகத் தில் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா செய்தியாளர்களி டம் நேற்று  (27.9.2023) கூறியதாவது: 

மணிப்பூர் மாநிலத்திலும்  ஒன்றி யத்திலும் பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அங்கு நடைபெறும் கல வரத்தை அடக்க முடியாமல் அர சாங்கம் தோல்விஅடைந்துள்ளது. அங்கு நடைபெறும் போதை பொருள் விற்பனையை ஊக்குவிப் பதே அம்மாநில முதலமைச்சர் தான். அனைத்து கட்சித் தலைவர் களையும் சந்தித்து, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக மணிப்பூருக்கு பிரதமர் சென்றால் மட்டுமே பிரச்சினையை தீர்க்க முடியும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவற்றில் 17 கட்சிகள் குறித்து பெரிய அளவுக்கு யாருக் கும் தெரியாது. அண்மையில் அதிமுககூட வெளியேறிஉள்ளது. ஆனால் போதிய கட்டமைப்பு களை உருவாக்கி 'இண்டியா' கூட்டணி வலுவடைந்து வருகிறது. மத ரீதியான பேச்சை பிரதமர் பேசி வருகிறார். தற்போது ஸநாதன சர்ச்சை வெடித்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவற்றை ஏற்க முடியுமா. இதுகுறித்து பிரதமர் மோடிவிளக்க முடியுமா? அடுத்த தேர்தலிலும் மோடி பிரதமரானால் இந்தியா இரண் டாக நிச்சயம் பிரியும். அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. அவரால் மட் டுமே அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து இருக்கிறது. எதிர்க்கும் கட்சிகளை பாஜக அழித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இரா. முத்தரசன்

பின்னர் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கருநாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் முழு அடைப்பு போன்றவற்றில் ஈடுபட வேண்டிய நிர்பந்தத்துக்கு விவசாயிகள் தள் ளப்படுவார்கள். நதிநீர் பிரச் சினையில் கூட்டணியை வைத்து குழப்ப வேண்டியதில்லை. ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும். துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார். இந்த சந்திப்பின்போது, மாநிலதுணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செய லாளர் மாசிலாமாணி உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment