பா.ஜ.க.வுக்கு தீவிர பிரச்சாரம் செய்த 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவன தலைவர் அஜய்சிங் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

பா.ஜ.க.வுக்கு தீவிர பிரச்சாரம் செய்த 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவன தலைவர் அஜய்சிங் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

புதுடில்லி, செப்.16 “சுவிஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண் டிய தொகையை செலுத்தா விட் டால் திகார்  சிறைக்கு செல்ல நேரிடும்” என  ‘ஸ்பை ஸ்ஜெட்’ விமான நிறுவனத்தின் உரிமை யாளரும், தீவிரமான பாஜக ஆதரவு கார்ப்பரேட் முதலாளியு மான அஜய்சிங்-கிற்கு உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  

‘மலிவு விலை விமான சேவையே தங்களின் நோக்கம்’ என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், சுவிட் சர்லாந்தின் எஸ்.ஆர். டெக் னிக்ஸ் நிறுவனத்திடம் விமான இன்ஜின்கள், உதிரிப் பாகங்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஒப் பனைக்கான சேவைகளைப் பெற்று வந்தது.  இதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பரில் 10 ஆண்டு ஒப்பந்தத்திலும் கையெ ழுத்திட்டது. அதில், எஸ்.ஆர். டெக்னிஸ் நிறுவனம் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனத்திடம் இருந்து பணம் பெறுவதற்கான உரி மத்தை ‘கிரெடிட் சுவிஸ்’ நிறுவனத்திற்கு வழங்கியது.  

ஆனால், உரிய கால அவகாசத்திற்குள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பணத்தை செலுத்த வில்லை என்று கூறி ‘கிரெடிட் சுவிஸ்’ நிறுவனம் உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தது.  உச்ச நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது. ஆனால், அதன்பிறகும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பணத்தை வழங்க வில்லை.  இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அஜய் சிங்கிற்கு எதிராக ‘கிரெடிட் சுவிஸ்’ நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 இதுவரை 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வைப்புச் செய்யப்பட்டு இருக்க வேண்டிய நிலையில், 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வைப்புச் செய்யப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானு தீன் அமானுல்லா அமர்வு, சுவிஸ் நிறுவனத்திற்கு 5 லட்சம் டாலர் தவணையுடன் 1 மில்லியன் டாலர் தொகையை உடனடியாக செலுத்த உத்தரவிட்டது டன், இந்த உத்தரவை மீறினால் திகார் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளது. ‘ஸ்பைஸ் ஜெட்’ தலைவர் அஜய் சிங் பாஜக-வின் தீவிர ஆதர வாளராவார். பாஜகவுக்காக பல்வேறு தேர்தல்களில் பிரச் சாரம் செய்துள்ளார். பிரபல முழக்க மான ‘ஆப் கி பார் மோடி சர்கார்’ என்பதை நாடு முழுவதும் விளம்பரப்படுத்தியது அஜய் சிங்தான். அதுமட்டுமல்ல, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக-வின் வெற்றிக்கு பேருதவியாக இருந்த விளம்பரங்களின் யுக் தியை உருவாக்கியதே அஜய் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அஜய் சிங் நீதிமன்றத்தில் ஆஜ ராகியிருந்த நிலையில், “நாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு நகர வேண்டியது இருக்கும். உங்கள் நிறுவனத்தை மூடினா லும் எங்களுக்கு கவலை இல்லை. அஜய் சிங்-தான் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் உங்கள் மரணத்தை பற்றி கூட கவலைப்படவில்லை. நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், நாங்கள் உங்களை திகார் சிறையில் அடைப்போம்” என்று காட்டமாக குறிப்பிட் டுள்ளனர்.


No comments:

Post a Comment