ஆலங்குடியில் எழுச்சியோடு நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

ஆலங்குடியில் எழுச்சியோடு நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

ஆலங்குடி,செப்.28- அறந்தாங்கி கழக மாவட் டம் ஆலங்குடியில் எழுச்சியோடு நடை பெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் ஆலங்குடி நகர கழக தலைவர் 

த. நெடுஞ்செழியன் தலைமையில், மாவட்ட காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் பெ.ராவணன் மாவட்ட தலைவர் மாரிமுத்து மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலையில் அறந் தாங்கி  நகர திராவிடர் கழகத் தலைவர் ஆ.வேலுச்சாமி வரவேற்புரை நிகழ்த்த  நிகழ்வு தொடங்கியது. 

கூட்டத்திற்கு கழக பேச்சாளர் மாங்காடு சுப. மணியரசன் தொடக்க உரையாற்றினார்.

இறுதியாக கழக பேச்சாளர் இராம.அன் பழகன் சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில், ஒரு நூற்றாண்டு களுக்கு முன்பாக கேரளத்தில் உள்ள வைக்கத்தில் தந்தை பெரியார் முதல் மனித உரிமை போராட்டத்தைதொடங்கி இறுதி வரை களத்தில் நின்று போராடி வெற்றி பெற்ற வரலாற்றை விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறினார் தொடர்ந்து சேரன்மாதேவி குருகுல போராட்டத்தில் ஜாதிய பாகுபாட்டை ஒழிக்க தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டதையும்   விரிவாக எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்காகவும்  கல்வித்துறையில் தமிழ் நாட்டு  மாணவர்கள் பெருமளவிற்கு உயர் வதற்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கான வாய்ப் பினை உருவாக்கி தந்தார்கள் என்பதையும் நம்முடைய மாணவர்கள் உயர் கல்விகள் கற் பதற்கான வாய்ப்பையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதேபோல்  பெண்களுக்கான திட்டங் கள் கல்வி வேலை வாய்ப்பு பெண்களுக்கு சொத்துரிமை ஆகிய திட்டங்களை சட்ட வடிவம் ஆக்கி அமல்படுத்திய பெருமை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களுக்கு மட்டுமே உரித்தானது என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

தந்தை பெரியாரின் இறுதிப் போராட்ட மான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையினை சட்ட வடிவம் ஆக்கி அதை நிறைவேற்றுவதற்காக போராடினார். ஆகம பயிற்சி கல்லூரிகளை திறந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்து பயிற்சி பெற ஏற்பாடுகளை செய்தவர் நம்மு டைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதை நினைவுபடுத்தி உரையாற்றினார்.

இந்த விழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.ராவணன் மாவட்ட தலைவர் மாரிமுத்து மாவட்ட செயலாளர் முத்துபெரியார் பெருந்தொண்டர் குப்பக்குடி இளங்கோ .வீரையா பக மாவட்ட செயலாளர் அறந்தாங்கி நகரத் தலைவர் வேலுச்சாமி நகர செயலாளர் பால்ராஜ்குப்பக்குடி முருகேசன் பகுத்தறிவாளர்கள் மாவட்ட துணைச் செய லாளர் அம்பிகாவதி மற்றும் கழக தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment