பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்கும் சூழ்ச்சி ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தொழிலாளர் அமைப்பு போராட்ட அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்கும் சூழ்ச்சி ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தொழிலாளர் அமைப்பு போராட்ட அறிவிப்பு

 பெங்களுரு, செப்.20 அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.என்.பதக், பொதுச் செயலாளர் சிறீ குமார், பாரதிய பிரதிரக் ஷா மஸ்தூர் சங்கத்தின் துணைத் தலைவர் சாது சிங், பொதுச் செயலாளர் முகேஷ்சிங் மற்றும் பாதுகாப்புத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.சவ்பே, பொதுச் செய லாளர் அஜய் ஆகியோர் கூட் டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசு தன்னிச் சையாக முடிவு செய்து பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலைகளை 7 கார்ப் பரேஷன்களாக மாற்றியது. பின்னர், 2 ஆண்டுகளுக்குள் அவற்றை ஒன்றிணைத்து 4 கார்ப்பரேஷன்களாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. பாதுகாப்புத் துறை நிறு வனங்களை கார்ப்பரேஷன் களாக மாற்றியது முற்றிலும் தோல்வியாகும். கடந்த 2021 செப்.30-ஆம் தேதிக்கு முன் பிருந்தபடி 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளாக மீண்டும் செயல்படுத்த வேண்டும். இது தொடர்பான முடிவை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். 

இந்நிலையில், வரும் அக் டோபர் முதல் வாரம் கார்ப்ப ரேஷன் நாளாகக் கொண்டாட ஒன்றிய அரசு முடிவு செய் துள்ளது. இதைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அது மட்டுமின்றி, அக்.3ஆ-ம் தேதி கார்ப்பரேஷன்களை விலக்கும் நாளாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொள்வதாடு அனைத்து பாதுகாப்புத் துறை தொழிற் சாலைகளுக்கு முன்பாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறையில் அதானி மற்றும் அம்பானி நிறு வனங்களுக்கு 100 விழுக்காடு முதலீட்டிற்கு கதவைத் திறந்த ஒன்றிய அரசு அந்தத் துறை நிறுவனங்களை கார்ப்பரேசன் களாக மாற்றி பின்னர் அதை நீண்ட கால ஒப்பந்தத்தில் அதானி நிறுவனத்திற்கு தரும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசின் இந்த போக் கிற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளன.


No comments:

Post a Comment