'மகளிர் உரிமைத் தொகை' வங்கிக் கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

'மகளிர் உரிமைத் தொகை' வங்கிக் கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, செப்.10  மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ஆம் தேதி காஞ்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள் ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இணைய 1.63 கோடி பெண்கள் விண் ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்து வருகின்றனர். 

மாதம்தோறும் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளின்வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது. வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படஉள்ளது. அதனை "ரூபே கார்டாக" வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளைநியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்ததும், அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குக்கு சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1-ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இதற்கிடையே, இத்திட்டத்தில் தகுதியான பயனாளர்களின் எண் ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகஉள்ள நிலையில், இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை 11ஆம்   நடை பெறவுள்ளது.


No comments:

Post a Comment