ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 17, 2023

ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா

பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

கருநாடக அரசின் சமூக நலத்துறை தொடர்பாக பன் னாட்டு ஜனநாயக தின விழா பெங்களூரு விதான சவுதாவில்  நடைபெற்றது. இதில் முதல மைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சாசன புத்தகத்தை வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா, காவல் துறை அமைச்சர் பரமேஸ்வர், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, உணவுத்துறை அமைச்சர் கே. எச்.முனியப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன்னட மொழி வளர்ச் சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிகோளி, மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, சட்டமன்ற மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களும் உறுதிமொழி எடுத் தனர். அதுபோல் இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் விதானசவுதா கட்டடம் முன் பாக நின்று அரசியல் சாசன புத் தகத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் சித் தராமையா பேசும்போது கூறிய தாவது:- அரசியல் சாசனத்தை ஒழித்துவிட்டு மனு தர்மத்தை (ஸநாதன தர்மம்) அமலுக்கு கொண்டு வந்தால், 90 சதவீத இந்தியர்கள் அடிமைத்தனத்தில் தள்ளப்படுவார்கள். இதற்காக பல்வேறு சதிகள் நடைபெற்று வருகின்றன. நாம் இந்திய மக்கள் என்று சொன்னதுமே அரசியல் சாசன புத்தகம் திறந்து கொள் கிறது. அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாம் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றா விட்டால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது.

சமத்துவ சமுதாயம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் படி எங்கள் அரசு அனைவரின் முன்னேற்றத்திற்காக திட்டங் களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்குவது தான் எங்கள் திட்டங்களின் நோக் கம் ஆகும். அரசியல் சாசனம் தொடங்கப்பட்ட பிறகு நமது நாட்டில் ஜனநாயகம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்தே ஜனநாயக கோட்பாடுகள் நமது மண்ணில் இருந்தது. அரசியல் சாசனத்தை அமலுக்கு கொண்டுவந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலிருந்து நமது அரசியல் சாசனத்தின் முக் கியத்துவம் வெளிப்படுத்தப்பட் டது. அரசியல் சாசனத்திற்கு எதிரான சக்திகள், மனு தர் மத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றன. இதில் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். இவ் வாறு சித்தராமையா கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பன்னாட்டு ஜனநாயக தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், பள்ளி, -கல்லூரி மாணவ-மாணவிகள் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்கும் உறுதி மொழி எடுத்துக்கொண் டனர். மேலும் இதில் பங்கேற்ற வர்கள் அனைவரும் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பிரதமர் மோடி மத்தியபிர தேச மாநிலம் போபாலில் நடந்த விழாவில், ஸநாதன தர் மத்தை ஒழிப்பதையே குறிக் கோளாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுவ தாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கருநாடக முதல மைச்சர் சித்தராமையா, ஸநா தன தர்மத்தை அமல்படுத்தினால் மக்கள் அடிமைப்படுத்தப்படு வார்கள் என பேசியுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment