'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் : தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் : தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

இந்தூர்,செப்.28- நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த் தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (27.9.2023)  நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறு வனங்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன. நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-ஆவது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத் தின் ஆக்ராவுக்கு 3-ஆவது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன. மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன. குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டி லேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியப்பிரதேசத்துக்கு குடியரசுத் தலை வர் முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடத்துக்கான விருது வழங்கப் பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-ஆவது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment