வடகாடு கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, கழகப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

வடகாடு கிராமத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, கழகப் பொதுக்கூட்டம்


வடகாடு, ஆக. 1- வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்டம், அறந் தாங்கி கழக மாவட்டம் வடகாட்டில் 3.7.2023 அன்று மாலையில் எழுச் சியோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் க. மாரிமுத்து தலைமை ஏற்க, மாவட்ட இளைஞ ரணி தலைவர் ப. மகா ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். 

நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மாங்காடு சுப. மணியரசன்  புதுக்கோட்டை மாவட் டத்தில் ஒரு முற்போக் கான பகுதி இது. எழுச்சி மிக்க இளைஞர்கள், மாணவர்களை கொண்ட  பகுதி என்பதை கோடிட்டுக் காட்டினார். 

வடகாடு ஊராட்சி மன்றத் தலைவர் மணி கண்டன் பெரியார் 1000 போட்டித் தேர்வில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசு களை வழங்கி, தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் முத்தமிழறி ஞர் கலைஞரும் இல்லை யென்றால் இந்த சமூகம் எவ்வளவு கீழ்ப்படிந்த நிலைக்குப் போயிருக்கும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். அவர் பேசும்போது, இதே மேடையில் இன்றைய தினம் தந்தை பெரியார் அவர்கள் இங்கிருந்து பார்த்திருந்தால் கூட்டம் கூட்டமாக கல்லூரிகளுக் கும் பள்ளிகளுக்கும் வேலைகளுக்கும் மகளிர் செல்வதை பார்த்து நிச் சயமாக தந்தை பெரியார் மகிழ்ச்சியுடன் பெருமை அடைந்திருப்பார் என குறிப்பிட்டார்.

50 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் அவர்கள் கிரா மத்துக்கு ஒரு உணவ கத்தை பொதுவாக அமைக்க வேண்டும். அங்கே சமைக்க வேண்டும். பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும். அங்கு வந்து உணவு வாங்கி அனைவரும் சாப்பிட வேண்டும். பெண்கள் சமைக்கும் இயந்திரமாக வீட்டில் இருக்கக் கூடாது. என்கின்ற செய்தியை பதிவு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இறுதியாக சிறப்புரை யாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி கலந்து கொண்டு நீண்ட தொரு விளக்க உரையை தகுந்த ஆதாரங்களுடன் சிறப்பான தகவல்களு டன் நிகழ்த்தினார். பொது மக்களும், சிந்தனையாளர் களும், பகுத்தறிவாளர்க ளும், மாணவர்களும், பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், ஏராளமானோர் கலந்து கொண்டு உரை கேட்டு மகிழ்ந்து சிறப்பித் தார்கள். 

நிகழ்ச்சியில் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் மாவட்ட காப்பாளர் பெ. ராவ ணன், மாவட்டத் தலை வர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் க. முத்து,       மாவட்ட இணைச்செய லாளர் க. வீரையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரெ. மணி மாறன், நெய்வத்தளி குமார், அறந்தாங்கி நகர அமைப்பாளர் ஆ. வேல் சாமி, பேராவூரணி இரா. நீலகண்டன், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் சோம. நீலகண்டன் மற் றும் கழகப் பொறுப்பா ளர்களும் தோழர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment